முக ஸ்டாலின் தலைமையில் வீட்டை கொளுத்திய தொண்டர்கள்! தொடங்கிய அராஜகம்!

Photo of author

By Rupa

முக ஸ்டாலின் தலைமையில் வீட்டை கொளுத்திய தொண்டர்கள்! தொடங்கிய அராஜகம்!

சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் அவரவர் ஆதரவாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இருப்பினும் அவர்கள் பிரச்சாரம்,கூட்டம் என கூட்டும் போதெல்லாம்  சில பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் என ஒட்டி ஆரவாரம் செய்துவிடுகின்றனர் அவர்களது தொண்டர்கள்.அந்தவகையில் முக.ஸ்டாலின் சென்னை தாம்பரம் சன்முகம் நகரில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார்.,அப்போது அவரை வரவேற்பதற்காக சில பேனர்கள்,போஸ்டர்கள் ஓட்ட பட்டிருந்தது.

அதனையெல்லாம் தாண்டி அவர் வரும் போது அவரது தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர்.அப்படி வெடித்துக் கொண்டிருக்கும் வேலையில் பகலிலே வானவேடிக்கை பட்டாசுகளையும் ஓர் வீட்டின் மாடியில் இருந்துக்கொண்டு வெடித்தனர்.அப்போது அவ்வழியே  திமுக ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த மாடியில் உள்ள பட்டாசுகள் அனைத்தும் எதிர்பாரா நேரத்தில் ஒன்றுபட்டு வெடித்து மாடியே தீ பற்றி எறிய அரம்பித்துவிட்டது.அதன்பின் அங்கு பாதுகாப்பிற்காக மாடியில்  நின்று கொண்டிருந்த போலீசார் 2 வருக்கு தீ காயம் ஏற்பட்டது.போலீசார் உட்பட மொத்தம் 6 பேருக்கு தீ காயம் ஏற்பட்டது.இதுகுறித்து போலீசார் அங்கு விசாரணை செய்து வருகின்றனர்.

இவர்கள் இவ்வாறு செய்து மாடி தீ பற்றி எரிந்ததை அங்குள்ள மக்கள் அனைவரும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே இவர்கள் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது என பேசினர்.