கையும் களவுமாக சிக்கிய எடப்பாடியின் ஆட்சி! குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா?

0
95
The rule of Edappadi who was caught red handed! Will he plead guilty?
The rule of Edappadi who was caught red handed! Will he plead guilty?

கையும் களவுமாக சிக்கிய எடப்பாடியின் ஆட்சி! குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா?

இந்த சட்டமன்ற தேர்தல் முற்றிலும் வேறுபாடாக அமையும் என பலரால் பேசப்பட்டு வருகிறது.இதனைத்தொடர்ந்து பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவருக்கும் பல வகையில் லஞ்சம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் சிந்தித்து  பல தனிப்படை குழுக்களை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.இதனையெல்லாம் கடந்தும் பலர் லஞ்சம் வழங்கி தான் வருகின்றனர்.தற்போது முதலமைச்சராக இருக்கும் அரசாங்கமே தங்கள் கட்சி வெற்றி பெறுவதற்கு லஞ்சமாக பணத்தை கொடுத்துள்ளது.ஆட்சியிலிருக்கும் இவர்களே இவ்வாறு விதிமுறைகளை மீறினால் மற்றவர்கள் எப்படி விதிமுறைகளை பின்பற்றுவார்கள்.

சென்னை சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளார்.அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பாமக வேட்பாளர் கஸாலி போட்டியிடுகிறார்.கஸாலிக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தர அதிமுகவின் சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜெ.எம்.பஷீர் அப்பகுதியின் வாக்களிக்கும் மக்கள் அனைவரிடமும் அதிமுகவிற்கே உங்கள் ஓட்டுகளை போடும்படி பணத்தை லஞ்சமாக கொடுத்து வருகிறார்.அவர் வாக்களிக்கும் மக்களை தனது வீட்டிற்கே வரவழைத்து அவர்களது வாக்களர் அட்டையை சரிபார்த்து ஒரு அதிமுக அட்சகம் அடிக்கப்பட்டுள்ள ஒரு துண்டு சீட்டில் ரூ.500 கொடுத்துள்ளார்.அவர் கொடுக்கும் போது அதிமுகவினரே சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி திருவல்லிக்கேணி பகுதியை அதிமுகவினர் பாமக விற்கு ஒதுக்கியதால் அதிமுக வில் பலர் கோவமடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.அக்காரணத்தினால் அதிமுக வில் இருக்கும் சிலரே அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு வாக்களர்களை வீட்டிற்கே அழைத்து லஞ்சம் கொடுத்த வீடியோ அதிக அளவு பரவி வைரலாகி வருகிறது.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே இப்படி செய்யலாமா என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.இதில் அதிமுக இந்த குற்றத்தை கண்டும்காணமல் விட்டுவிடுமா அல்லது தகுந்த நடவடிக்கை எடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.