எங்க அம்மாவுக்கு ஓட்டு போடுங்க..அம்மாவுக்காக களத்தில் இறங்கிய ராதிகா சரத்குமார் மகன்..!!

Photo of author

By Vijay

எங்க அம்மாவுக்கு ஓட்டு போடுங்க..அம்மாவுக்காக களத்தில் இறங்கிய ராதிகா சரத்குமார் மகன்..!!

Vijay

Vote for our mother.. Radhika Sarathkumar's son entered the field for his mother..!!

எங்க அம்மாவுக்கு ஓட்டு போடுங்க..அம்மாவுக்காக களத்தில் இறங்கிய ராதிகா சரத்குமார் மகன்..!!

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை ராதிகா சரத்குமார் தற்போது அரசியல்வாதி என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக சரத்குமார் மக்கள் சமத்துவ கட்சி என்ற கட்சியை நடத்தி வந்த நிலையில், தற்போது பாஜகவுடன் இணைந்து விட்டார். எனவே ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார். 

எப்படியாவது ஜெயித்து விடவேண்டும் என்பதால், கணவரும் மனைவியும் சேர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நாளை மறுநாள் என்பதால், இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் வேட்பாளர்கள் முடிந்த வரை அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். 

இந்நிலையில் தனது தாய்க்காக ராதிகா சரத்குமாரின் மகன் ராகுல் விருதுநகர் தொகுதி மக்களிடையே வாக்கு சேகரித்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் ராகுல் ஆன்லைன் மூலம் வாக்கு கேட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது, “வணக்கம் என் பெயர் ராகுல் சரத்குமார். எனது அம்மா ராதிகா சரத்குமார் இந்த முறை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். எனது அம்மா மிகவும் திறமையானவர். மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை செய்ய நினைப்பவர். இதை நான் நேரில் வந்து சொல்ல ஆசைப்பட்டேன். 

ஆனால் எனக்கு கல்லூரியில் தேர்வு இருப்பதால், என்னால் வரமுடியவில்லை. என் அம்மா மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உங்களுக்கும் என் அம்மா மீதும் தாமரை சின்னம் மீதும் முழு நம்பிக்கை இருந்தால், என் அம்மாவிற்கு ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுள்ளார். முதல் முறையாக தனது அம்மாவிற்காக ராகுல் வாக்கு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.