இன்று தொடங்குகிறது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்! தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
164

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டிருக்கின்றது செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 1ம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரையில் மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கிறது என கூறியிருக்கிறார்.

அத்துடன் வாக்காளர்கள் தங்களுடைய பெயரை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் அனேக மாற்றங்களை முன்னெடுப்பதற்கும், வசதியாக இன்றும், நாளையும், வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன. அதோடுwww.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி உள்ளிட்ட இணையதள முறையிலும் விண்ணப்பம் செய்ய வசதி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என கூறியிருக்கின்றார்.

Previous articleஅமைச்சர் அறிவித்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!
Next articleதலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! நிம்மதி இழந்த சென்னைவாசிகள்!