தேர்தல் வன்முறையில் சாக்கடையில் வாக்கு எந்திரங்கள்!! அடுத்ததாக வன்முறையில் உயிர்பலி வாங்கும் மாநிலம்!!
பஞ்சாயத்து தேர்தலில் நடைபெற்ற வன்முறையில் 20 பேர் உயிரிழந்தனர். வாக்கு எந்திரங்கள் சாக்கடையில் வீசப்பட்டன.
நேற்று முன்தினம் மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைப்பெற்றது. பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகளும் நடந்தது.
இதன் காரணமாக மறுதேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு மேற்கு வங்காள மாநிலத்தின் புரூலியா, பிர்பும், ஜல்பைகுரி, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 697 வாக்கு சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் 20 பேர் உயிரிழந்தனர். முர்ஷிதாபாத் நகரில் ஏற்பட்ட வன்முறையில் பலர் தாக்கப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அதில் 3 வாக்கு பதிவு இயந்திரங்கள் தூக்கிச் செல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டது. அதை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதுபற்றி உள்ளூர் மக்கள் கூறும்போது தேர்தலுக்கு பின்னர் நிலைமை முற்றிலும் சரி இல்லை. அச்சத்தினால் மக்கள் வெளியில் வராமல் உள்ளனர். மீறி வெளியில் வந்தால் அவர்களை திரினாமுல் காங்கிரஸார் மிரட்டி வந்தனர். வன்முறையில் வாக்குப் பெட்டிகள் சூறையாடப் பட்டதோடு மட்டுமில்லாமல் கிராமங்களில் உள்ள எதிர்கட்சியினர் மீது வெடி குண்டுகளும் வீசப்பட்டன.
அதேபோல பா.ஜ.க. கட்சியினர் , சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர். அதில் டயர்கள் பல எரிக்கப்பட்டுள்ளது . ஊர்வலம் நடத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கோரிக்கை அளித்தார்.
தேர்தல் வன்முறையால், அரசியல் கட்சிகள் இடையே வாக்குவாதங்கள் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் ஒன்றை ஒன்று எதிரெதிராக தாக்கி பேசி வருகின்றன. மேலும் தேர்தலின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு மற்ற கட்சிகள் மீது குற்றம் கூறி வருகின்றன.
இதையடுத்து மத்திய படைகளின் பலத்த பாதுகாப்புடன், 697 வாக்கு சாவடிகளில் தற்போது மறுதேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மக்களும் பயத்தை விடுத்து ஆர்வமுடன் வாக்களிக்க வருகை புரிந்துள்ளனர்.