வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Rupa

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Rupa

Wages of those involved in the strike! Action announcement published by the Transport Corporation!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சென்னை போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களை நாளை வேலை நிறுத்தம் போரட்டத்தில் கலந்துகொள்ளாமல் கண்டிப்பாக  பணிக்கு வர வேண்டும் என்று எச்சரிக்கை அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 6வதாக பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.ஊதியத்தை உறுதி செய்யும்படி  போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தம்போராட்டம் நடத்துவதாக  கூறியுள்ளனர். போக்குவரத்து பணியாளர்கள்  இந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

அதனையடுத்து தொழிலாளர்களுக்கு நாளை எந்த ஒரு விடுமுறையும்  கிடையாது என்று கூறியுள்ளனர். அதன் பின்னர் ஏற்கனவே குடுத்த விடுப்பும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் பணியாளர்கள் போராட்டத்தின் போது பணிக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடிக்கப்படும் என்று எச்சரிக்கை அளித்துள்ளனர்.மேலும் தொழிலாளர்கள் நாளை பணிக்கு வரவில்லை என்றால் அவர்களின் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.அதனையடுத்து தொழிலாளர்களை பணிக்கு செல்லவிடாமல் போராட்டத்திற்கு தூண்டுபவர்களின்  மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை அளித்துள்ளது……