வெளிநாட்டிலும் இந்தியா கெத்து!! வெளிநாட்டு இளைஞரின் வாழ்வை காப்பாற்றிய இந்திய இளைஞன்!!

Photo of author

By Kowsalya

ஆசைஆசையாக சிக்கன் சாப்பிட்ட இளைஞருக்கு சிக்கன் துண்டு மாட்டி கொள்ள மூச்சுத்திணறல் ஏற்படும் பொழுது இந்திய இளைஞர் ஒருவர் மூச்சுத்திணறல் இருந்து காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்கு உரியதாக பேசப்பட்டு வருகிறது.

 

பிரித்தானியாவில் உள்ள North Wales-ல் இருக்கும் இந்திய உணவகமான Bangor Tandoori என்பது அந்த பகுதியில் மிகவும் பிரபலமான ஒன்று. அங்கு நிறைய பேர் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அங்கு இளைஞர்கள் அடங்கிய குழு ஒன்றும் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

அப்பொழுது திடீரென்று அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதை பார்த்த வங்கதேசத்தை சேர்ந்த இளைஞரான 24 வயது மதிக்கத்தக்க Sheakh Rifat என்ற மாணவன், அவரை வெளியே அழைத்து, பின்னிருந்து அவரை தூக்கி குலுக்கினார். இரண்டு மூன்று முறை குலுக்கிய பின்னர் சிக்கன் துண்டு வெளியே வந்து விழுந்துள்ளது. சிக்கன் சாப்பிட்ட அந்த நபர் சாதாரண நிலைக்கு திரும்பினார். அங்குள்ள அனைவரும் Sheakh Rifat செயலுக்கு நன்றி பாராட்டும் விதமாக கைதட்டினர். அந்த நபர் சிக்கனை சாப்பிட்டுவிட்டு அதை நன்றாக விழுங்காத காரணத்தால் தொண்டையில் மாட்டிக் கொண்டுள்ளது. தக்க சமயத்தில் காப்பாற்றிய Sheakh Rifat- க்கு நன்றி கூறினார்.

 

இதுகுறித்து Sheakh Rifat கூறுகையில், நான் அந்த வாடிக்கையாளரை கவனித்து வந்தேன். அவன் சிக்கனை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரத்திற்குள் அவர் கண்களில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் அவர் முகம் சிவந்துபோய் மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டிருந்தார், அப்போது உடனடியாக அவரை அழைத்து வயிற்றுப் பகுதியை நன்கு இறுக்கமாக பிடித்து 1,2 முறை குலுக்கும் பொழுது சிக்கன் துண்டு வெளியே வந்து விழுந்தது. அவர் பின் நன்றாக சுவாசிக்க தொடங்கினார். அதன்பின் என்னை அழைத்து இருக்கமாக கட்டிப்பிடித்து நன்றி சொன்னார்.

எப்படி இது உங்களுக்குத் தெரியும் என்று கேட்க, தான் சிறு வயதில் இருக்கும் பொழுது தனது தந்தை இப்படி செய்து தன்னை காப்பாற்றினார் .. அதனால் அந்த செயலையே நான் இவருக்கு செய்து காப்பாற்றினேன் என்று கூறினார்.

 

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. அதை மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்தியனாக இருக்க பெருமைப்படுகிறோம் என Sheakh Rifat – க்கு வாழ்த்துக் கூறி பாராட்டி வருகின்றனர்.

 

உங்கள் பார்வைக்காக அந்த வீடியோ