தமிழகம்: தற்போது தமிழ்நாட்டில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டவருக்கு “வாக்கிங் நிமோனியா” எனப்படும் நுரையீரல் தொற்று காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது குளிர்காலம் என்பதால் குளிர்ந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் சளி அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் இதற்கிடையே ‘வாக்கிங் நிமோனியாவும்’ பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நோய் குறிப்பாக 5 வயது முதல் 17 வயது உட்பட்டவர்களுக்கு பாதிப்பு அதிகமாக ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்த ‘வாக்கிங் நிமோனியா’ என்பது தீவிர தன்மையை குறைத்த நிமோனியா ஆகும். அறிகுறிகள் சளி, இரும்பல், தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு ஆகியவை இருக்கும் பொதுவாக ‘வாக்கிங் நிமோனியாவால்’ பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்காது. ஆனால் தற்போது பாதிக்கப்படுபவர்கள் அவசர பிரிவில் சேர்க்கும் அளவிற்கு தீவிரம் அடைந்து உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றன.
இந்த ‘வாக்கிய நிமோனியா’ நுரையீரல் தொற்றி ஏற்படுத்தும் காய்ச்சலாக என்பதால் இதன் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த நோய் வயதானவர்களை தாக்கினால் பெரிதும் பாதிக்கும் இளம் வயதினரை தாக்கினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் இணை நோய்கள் எதுவும் இருக்காது என்பதால் ஒரு வாரத்தில் பழைய நிலைமைக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் இப்போது பாதிக்கப்பட்ட பலருக்கு ஆண்டிபயாட்டிக் மருந்துகள் பெரிய அளவில் பயன் பெறுவதில்லை என்றாலும் இந்த நோயின் தீவிரம் அதிகரித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் சூழல் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.