வாக்கிங் Vs ஜாகிங் பயிற்சி: நமக்கு உண்மையில் எது சிறந்த பயிற்சி தெரியுமா?

0
8

நமது அன்றாட வாழ்வில் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்களில் ஒன்று உடற்பயிற்சி.தினமும் 30 நிமிடங்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.குறிப்பாக காலையில் எழுந்ததும் சிறிது நேரம் நடைப்பயிற்சி அல்லது ஓட்டப் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

நாம் தினமும் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.நாம் சரியான உணவுப் பழக்க வழக்கங்களுடன் சீரான உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இருப்பினும் நடைபயிற்சி நல்லதா இல்லை ஓட்டப் பயிற்சி நல்லதா என்பது குறித்த சந்தேகம் பலருக்கும் இருக்கும்.ஒருவர் தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடைபயிற்சி மேற்கொண்டால் அவரது உடலில் இருந்து 300 கலோரிகள் குறையும்.

நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இரத்த ஓட்டம் மேம்படும்.இரத்த அழுத்தம் குறைய நடைபயிற்சி செய்யலாம்.உடலில் குவியும் கெட்ட கொழுப்புகளை கரைக்க நடைபயிற்சி செய்யலாம்.தினமும் 45 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

தினமும் நடைபயிற்சி மேற்கொண்டால் உடல் புத்துணர்வுடன் செயல்படும்.நடைபயிற்சி நமது உடலில் உள்ள உறுப்புகள் சீராக இயங்கும்.

அதேபோல் தினமும் ஓட்டப்பயிற்சி செய்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.45 நிமிட நடைபயிற்சியை விட 10 நிமிட ஓட்டப் பயிற்சி உடலில் இருக்கின்ற கலோரிகளை வேகமாக எரிக்கிறது.இருப்பினும் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள்,வயதானவர்களால் ஓட்டப் பயிற்சியில் ஈடுபவது என்பது மிகவும் கடிமான விஷயமாக இருக்கிறது.ஓட்டப் பயிற்சி நடைபயிற்சியைவிட எளிதில் உடல் எடையை கட்டுப்படுத்தும் என்றாலும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள்,மூட்டு தேய்மானம்,மூட்டு வலி பாதிப்பு இருப்பவர்களுக்கு ஜாகிங் ஆபத்தானதாக மாறலாம்.

Previous articleஎச்சரிக்கை மணி.. இந்த 05 அறிகுறிகள் இருந்தால்.. சீக்கிரம் மாரடைப்பு வரக் கூடும்!!
Next articleஉங்களை மட்டும் கொசு அதிகம் கடிக்குதா? காரணம் அறிந்தால் அதிர்ந்துவிடுவீர்!!