2 நிமிடத்தில் தொண்டை கட்டுக்கு தீர்வு வேண்டுமா? அப்போ “இஞ்சி + பட்டை” இப்படி பயன்படுத்துங்கள்!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கட்டு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதை மருந்து மாத்திரை இன்றி எளிதில் குணப்படுத்தும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி துண்டு
2)தேன்
செய்முறை:-
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை ஒரு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் இடித்த இஞ்சி துண்டுகளை அதில் போட்டு கொதிக்க விடவும்.இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்தால் தொண்டை கட்டு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி
2)மிளகு
3)பட்டை
4)துளசி
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு துண்டு பட்டை,10 துளசி இலைகள் மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி அருந்தி வந்தால் தொண்டை கட்டு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு
2)மஞ்சள் தூள்
3)இஞ்சி
4)தேன்
செய்முறை:-
ஒரு கிளாஸில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்க்கவும்.பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.இதை எலுமிச்சை சாற்றில் கலந்து விடவும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும்.
பின்னர் அதில் 100 மில்லி வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்கு கலக்கும்.இந்த பானத்தை குடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஏலக்காய்
2)கிராம்பு
3)மிளகு
4)மஞ்சள் தூள்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு ஏலக்காயை இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு இரண்டு கிராம்பு மற்றும் நான்கு மிளகு சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தி வந்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.