அரசு வேலை வேண்டுமா? கல்வித் தகுதி: டிகிரி.. மாதம் ரூ.12000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

0
34
#image_title

அரசு வேலை வேண்டுமா? கல்வித் தகுதி: டிகிரி.. மாதம் ரூ.12000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தபால் வழியாக வருகின்ற அக்டோபர் 25 ஆம் தேதி வரவேற்கப்பட இருக்கின்றன.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

பதவி: வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02

கல்வித் தகுதி:

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.கணினி அறிவு மற்றும் MS OFFICE தெரிந்தவர்களும் இந்த வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 28 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்:

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு (Written Exam)

*நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தகுதியும் விருப்பமும் இருக்கும் நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்.பின்னர் அதை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடி முறையிலோ விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 25-10-2023