நீண்ட கால மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு நிமிடத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

உடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்ற வேண்டியது அவசியம்.ஆனால் இன்றைய ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களால் நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

இந்த மலச்சிக்கல் பிரச்சனையை பெரியவர்கள் முதல் சிறு வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகின்றனர்.தற்போதைய காலகட்டத்தில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை யாரும் எடுத்துக் கொள்வதில்லை.மைதா,கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.இதனால் மலச்சிக்கல் பிரச்சனையை எளிதில் ஏற்பட்டுவிடுகிறது.மலச்சிக்கலை போக்க இந்த வீட்டு வைத்தியங்கள் தங்களுக்கு உதவும்.

தேவையான பொருட்கள்:

1)சீரகம்
2)ஓமம்
3)பெருஞ்சீரகம்
4)விளக்கெண்ணெய்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.தண்ணீர் சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம்,1/4 தேக்கரண்டி ஓமம்,1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து குறைவான தீயில் வைத்து கொதிக்க விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சில சொட்டு விளக்கெண்ணெய் ஊற்றி பருகவும்.

இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகினால் மட்டுமே மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.இந்த பானத்தை குடித்த அடுத்து ஐந்து நிமிடத்தில் மலக் குடலில் தேங்கி இருந்த நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:

1)எலுமிச்சம் பழம்
2)விளக்கெண்ணெய்

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1/4 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலந்து விடவும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடித்தால் எப்பேர்ப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையும் நொடியில் சரியாகிவிடும்.