10000 ரூபாய்க்கு கீழ் ஸ்மார்ட் போன் வேணுமா!!! அசத்தலான 5 ஸ்மார்ட்போன்கள் இதோ!!!

0
109
#image_title

10000 ரூபாய்க்கு கீழ் ஸ்மார்ட் போன் வேணுமா!!! அசத்தலான 5 ஸ்மார்ட்போன்கள் இதோ!!!

10000 ரூபாய்க்கு கீழ் விலை குறைவாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இதில் 10000 ரூபாய்க்கு குறைவாக உள்ள 5 ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் பலவிதமான ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றது. நமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்போன்களும் இதில் அடங்கும். அதிக அளவு விலையில் உள்ள ஸ்மார்ட் போன் வாங்கினால்தான் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்று இல்லை.

10000 ரூபாய்க்கும் ரேம், ரோம், கேமரா, பேட்டரி, டிஸ்பிளே என அனைத்தும் நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதங்களில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றது. அந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

10000 ரூபாய்க்கு குறைவாக உள்ள ஸ்மார்ட்போன்கள்…

சாம்சங் கேலக்ஸி எம்13…

சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன் விரிச்சுவல் ரேம் வசதியுடன் வருகின்றது. அதன்படி இதில் 12ஜிபி வரை ரேம் மெமரியை நீட்டிக்க முடியும். மேலும் 50 மெகா பிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் செல்பி கேமரா உள்ளது. மேலும் 6.6 இன்ச் அளவுள்ள முழு ஹெச்.டி டிஸ்பிளே வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போனை 9199 ரூபாய்க்கு வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்13…

சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் முழு ஹெச்.டி டிஸ்பிளே வசதியுடன் வருகின்றது. சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன் எக்ஸிநாஸ் 850 செயலி வசதியை கொண்டுள்ளது. 6000 எம்.ஏ.ஹெச் பேட்டரி வசதி மற்றும் பல வசதிகளை கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போனை 9199 ரூபாய்க்கு வாங்கலாம்.

ரெட்மி 12…

ரெட்மி 12 ஸ்மார்ட்போனும் 10000 ரூபாய்க்கு வாங்க முடியும். ரெட்மி 12 ஸ்மார்ட்போன் 50 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி88 செயலி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி ரோம் ஆகிய வசதிகளுடன் மேலும் பல வசதிகளை கொண்டுள்ளது.

ரியல்மி சி53…

ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் மெமரியுடன் உள்ளது. ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, 108 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கேமரா, டி612 செயலி, 5000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி போல பல வசதிகள் கொண்ட ரியல்மி சி53 ஸ்மார்ட்போனின் விலை 9999 ரூபாய் ஆகும்.

போக்கோ சி55…

போக்கோ சி55 ஸ்மார்ட்போன் 6.71 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே வசதியுடன் வருகின்றது. மேலும் 50 மெகா பிக்சல் கொண்ட இரண்டு பிரைமரி கேமரா, 5 மெகா பிக்சல் செல்பி கேமரா, மீடியா டெக் ஹெல்லோ ஜி 85 செயலி, 5000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி ஆகிய வசதிகள் உள்ளது. மேலும் பல வசதிகள் கொண்ட போக்கோ சி55 ஸ்மார்ட்போன் 6999 ரூபாய்க்கு வாங்கலாம்.

Previous articleபுரியாத புதிராக இருந்த கேள்விக்கு கிடைத்த விடை!!! கேமியோ ரோலில் லியோவில் நடித்த நடிகர் இவர்தான்!!!
Next articleவிடாமுயற்சி திரைப்படத்தின் வில்லன் சஞ்சய் தத் இல்லையாம்!!! படக்குழு வெளியிட்ட தகவல் என்ன!!?