அஜீரணம் எளிமையாக குணமாக வேண்டுமா? இதோ எளிமையான இரண்டு மருத்துவ முறைகள்! 

Photo of author

By Rupa

அஜீரணம் எளிமையாக குணமாக வேண்டுமா? இதோ எளிமையான இரண்டு மருத்துவ முறைகள்!
டிஸ்ஸ்பெசியா என்று அழைக்கப்படும் அஜீரணம் என்பது நாம் எளிமையாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை விட்டு கடினமான உணவுகளை அதிகமாக சாப்பிடும் பொழுதும் எண்ணெய் சார்ந்த உணவுகளையும் அதிகமாக சாப்பிடும் பொழுது அஜீரணம் ஏற்படும்.
அஜீரணம் வந்துவிட்டால் வயிற்றுக்குள் ஒரு அசௌகரியம் ஏற்படும். தற்பொழுதைய காலத்தில் குழந்தைகளுக்கும் அஜீரணக் கோளாறு ஏற்படுகின்றது. இந்த அஜீரணக் கோளாற்றை சரி செய்ய இந்த பதிவில் இரண்டு அருமையான மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவ முறை 1…
தேவையான பொருட்கள்:
* கருவேப்பிலை
* இஞ்சி
* சீரகம்
செய்முறை:
முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு சிறிய பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த பாத்திரத்தில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சேர்த்து குதிக்க வைக்க வேண்டும். இறுதியாக இதை ஆற வைத்து வடிகட்டி குடிக்கலாம். அஜீரணம் சரியாகி விடும்.
இரண்டாவது மருத்துவ முறை:
தேவையான பொருட்கள்:
* கருவேப்பிலை
* மோர்
செய்முறை:
முதலில் கருவேப்பிலையை எடுத்து தட்டியோ அல்லது அரைத்தோ அதன் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர். அந்த கருவேப்பிலை சாற்றை மோரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அஜீரணம் குணமாகும்.