உடலில் வேகமாக இரத்தம் ஊற வேண்டுமா? அப்போ கட்டாயம் இந்த ட்ரிங்க் குடிங்க!!

Photo of author

By Divya

உடலில் வேகமாக இரத்தம் ஊற வேண்டுமா? அப்போ கட்டாயம் இந்த ட்ரிங்க் குடிங்க!!

உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இல்லையேல் உடலில் பல நோய்கள் உருவாகி பாதிப்பை உண்டாக்கும்.எனவே இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக கீழ்க்கண்ட இயற்கை வைத்தியங்களை செய்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 கைப்பிடி அளவு முருங்கை இலையை போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பேரிச்சம் பழம்
2)பால்
3)தேன்

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் 2 விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழத்தை போட்டு சிறிது காய்ச்சாத பால் சேர்த்து அரைக்கவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் அரைத்த பேரிச்சம் பழ விழுதை அதில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)உலர் அத்திப்பழம்
2)தேன்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 2 உலர் அத்திப்பழத்தை போட்டு 2 தேக்கரண்டி தேன் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட்
2)தக்காளி
3)தேன்

செய்முறை:-

ஒரு கப் பீட்ரூட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.