குதிகால்களில் உள்ள வெடிப்புகள் மறைய வேண்டுமா? இதோ சில வழிமுறைகள் !!

Photo of author

By Sakthi

குதிகால்களில் உள்ள வெடிப்புகள் மறைய வேண்டுமா? இதோ சில வழிமுறைகள்
குதிகால்களில் வெடிப்புகள் தோன்றுவது ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் நிகழும். அதிலும் மழை காலம் மற்றும் குளிர்காலங்களில் பாத வெடிப்புகள் தோன்றுவது அதிகம் நிகழ்கின்றது.
குதிகால்கள் வெடிப்பு என்பது பல காரணங்களால் ஏற்படுகின்றது. முக்கியமாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு குதிகால் வெடிப்புகள் தோன்றும். பெண்களில் சிலர் ஹீல்ஸ் வைத்த செருப்புகளை அணிவார்கள். இதனால் பாதங்களில் அதிக அழுத்தம் ஏற்படுவதாலும் குதிகால் வெடிப்புகள் ஏற்படுகின்றது.
பாத வெடிப்புகள் என்பதை விட பாடங்களுக்கு மேல் உள்ள குதிகால்களில் பிளவு போல ஏற்பட்டு பின்னர் அது எரிச்சல், வலி பொன்றவற்றை தரக்கூடும். இதற்கு ஆங்கில மருந்துகள் பயன்படுத்துபவர்கள் தான் தற்போதைய நிலையில் காலத்தில் இருக்கின்றார்கள். கிராமங்களில் உள்ள வெடிப்புகள் மறைய வைக்க இயற்கையான சில வழிமுறைகள் உள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
குதிகால் வெடிப்புகளை குணப்படுத்தும் சில வழிமுறைகள்…
* குதிகால்களில் உள்ள வெடிப்புகள் மறைய கால்களை வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி சோப்பைக் கண்டு லேசாக கழுவி விடலாம்.
* தேங்காய் எண்ணெய் இதற்கு சிறப்பான ஒரு மருந்து ஆகும். குதிகால்களில் உள்ள வெடிப்புகள் மறைய வைக்க நாம் தேங்காய் எண்ணெயை எடுத்து குதிகால்களில் வெடிப்புகள் உள்ள இடத்தில் தேய்த்து விடுவதன் மூலமாக வெடிப்புகள் மறைய வைக்கலாம்.
* தேன், வாழைப்பழத் தோல்கள், தயிர் இந்த மூன்றையும் பயன்படுத்தி பேக் தயார் செய்து அதை குதிகால்களில் வெடிப்புகள் உள்ள இடத்தில் போடலாம்.
* குதிகால்களில் உள்ள வெடிப்புகள் மறைவதற்கு வெதுவெதுப்பான தண்ணீரில் வெடிப்புகள் உள்ள குதிகால்களை 15 முதல் 20 நிமிடம் வரை ஊற வைக்கலாம்.
* மேலும் தூங்கச் செல்வதற்கு முன்னர் வெடிப்புகள் உள்ள கால்களை அப்படியே விடாமல் கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளலாம்.
* கோகோ எண்ணெயும் இதற்கு ஒரு சிறப்பான மருந்துப் பொருள் ஆகும். கோகோ எண்ணெயை வெடிப்புகள் உள்ள குதிகால்களில் தேய்த்துவிட்டு கூட வெடிப்புகளை மறைய வைக்கலாம்.