வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

0
291

வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

நாம் எப்பொழுதும் நினைப்பது நம் வீட்டில் அமைதி நிலவ வேண்டும் கஷ்டங்கள் குறைய வேண்டும் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதுதான். ஒரு சிலர் தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தினமும் பூஜை செய்தால் கூட லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்காது.

அவ்வாறு உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். இந்த பரிகாரத்திற்கு முக்கியமான பொருட்கள் கற்பூரம், அகல் விளக்கு, சுத்தமான தேன். இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டுமே போதும். இந்த பரிகாரம் காலை ஆறு மணிக்கு செய்ய முடியும் என்றால் செய்யலாம். இல்லையெனில் மாலை ஆறு மணிக்கு மணிக்கு செய்ய வேண்டும். முதலில் பூஜையறையில் உள்ள விளக்கை ஏற்றிய பின்பு அகல் விளக்கை பூஜை அறையில் தரையில் வைக்க வேண்டும். அந்த அகல்விளக்கில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்திருக்க வேண்டும். பிறகு ஒரு கற்பூரத்தை அந்த அகல் விளக்கின் மேல் வைக்க வேண்டும். அதன் பிறகு கற்பூரத்தை ஏற்றி கொள்ள வேண்டும்.

கற்பூரத்தை ஏற்றும் பொழுது நமக்குள்ள கஷ்டத்தை மனதில் நினைத்துக் கொண்டு ஏற்ற வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு சொட்டு தேன் எடுத்து அந்த கற்பூரத்தின் மேல் விட வேண்டும். தேன் விட்டவுடன் சிறிது நேரம் கற்பூரம் எரிந்து பிறகு குளிரும். கற்பூரம் அணையும் வரை பூஜை அறையில் அமர்ந்து மனதார வேண்டுதலை நினைக்க வேண்டும். கற்பூரம் அணைந்த உடன் நாம் வழக்கம் போல் செய்யும் தண்ணீரை இறைவனுக்கு சமர்ப்பித்த பிறகு பூஜையை முடிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் உங்கள் பூஜை அறையில் செய்து வந்தால் உங்களுக்கு உள்ள கஷ்டங்கள் பறந்தோடும். மேலும் இந்த பரிகாரம் 48 நாட்கள் முழுமையாக செய்ய முடியவில்லை என்றால் 11நாட்கள் மற்றும் 21நாட்கள் கூட செய்யலாம். பரிகாரம் செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே உங்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படும்.

Previous articleபிரபல UPI செயலிக்கு தடை! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!
Next articleஇந்து சமய அறநிலையத் துறையில் காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்!