சளித் தொல்லையில் இருந்து விடுதலை பெற வேண்டுமா? இந்த இலைகளை மட்டும் இப்படி சாப்புடுங்க! 

Photo of author

By Rupa

சளித் தொல்லையில் இருந்து விடுதலை பெற வேண்டுமா? இந்த இலைகளை மட்டும் இப்படி சாப்புடுங்க!
அனைவருக்கும் எளிதில் தொற்றக்கூடிய நோயாக இருக்கும் சளித் தொல்லையில் இருந்து விடுதலை பெறுவதற்கு உதவும் சிறப்பான ஒரு மருத்துவமுறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மழைகாலம் என்றால் தான் சளி அதிகம் பேருக்கு பிடிக்கும். ஆனால் இந்த சதித் தில்லை வெயில் காலத்திலும் ஒரு சிலருக்கு தாக்கும். சளியால் மூக்கடைப்பு, தும்மல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பல தொல்லைகளை நாம் அனுபவிப்போம்.
ஒரு சிலர் சளி பிடித்துவிட்டால் மருந்து கடைக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். அது மிகவும் தவறான செயல். மாற்றாக நாம் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருத்துவ முறையை செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* ஆடாதொடா இலை
* துளசி இலை
* வெற்றிலை
* தூதுவளை
* தேன்
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஆடாதொடா இலை, துளசி இலை, வெற்றிலை, தூதுவளை ஆகிய நான்கையும் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின்னர் வேக வைத்த இந்த இலைகளை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இறுதியாக அரைத்த இந்த விழுதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளித் தொல்லை குணமாகும்.