ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்!
பெரும்பாலானோருக்கு தற்போது மாரடைப்பு மற்றும் ரத்தக்குழாயில் பிரச்சனைகள் போன்றவைகள் ஏற்படுவது இயல்பாக ஒன்றாக மாறிவிட்டது. மேலும் இரத்த குழாயில் ஏற்படக்கூடிய அடைப்பினை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
மாரடைப்பு மற்றும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நாம் தினசரி நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதயம் நன்கு பலமாக இருக்க வேண்டும் என்றால் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பிறகு சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
அதன் பிறகு வெங்காயத்தில் ரத்தத்தை நீர்மம் படுத்தும் தன்மை உள்ளது, மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும் வெங்காயம் அதிக அளவு பயன்படுகிறது. அதனால் தினந்தோறும் 25 கிராம் முதல் 50 கிராம் வரை வெங்காயத்தை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 5 பூண்டு பாலில் சேர்த்து குடித்து வந்தால் ரத்த குழாயில் உள்ள அடைப்புகள் அனைத்தும் நீங்கும். சிறிதளவு இஞ்சி சாறை தினமும் நாம் எடுத்துக் கொண்டால் மாரடைப்பிலிருந்து நம் இதயத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். அதன் பிறகு தேங்காய் எண்ணெயில் நாம் உணவை சமைத்து சாப்பிட்டால் இதயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
அதிகளவு காபி குடிப்பதினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் குறிப்பாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் காபி குடிப்பதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் உடன் நார் சத்து அதிகம் உள்ளதால் உடம்பில் உள்ள கொழுப்புகள் நீங்கி பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.