இனி ஆயிரக் கணக்கில் செலவு செய்ய தேவையில்லை!! மூட்டு வலி நீங்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!
நம்மில் சிலருக்கு தீராத இடுப்பு வலி, கை கால் வலி, மூட்டு வலி, முதுகு வலி இருக்கும். எந்த நேரமும் சோர்வாக இருப்பார்கள். அவ்வாறு எந்த ஒரு வலியும் இல்லாமல் சோர்வில்லாமல் சுறுசுறுப்புடன் இருக்க இந்த பதிவில் ஒரு அற்புதமான வீட்டு வைத்தியத்தை தெரிந்து கொள்வோம்.
இதை செய்ய தேவையான பொருட்கள்..
* வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து – ஒன்றரை கப்
* நாட்டுச் சர்க்கரை – 6 ஸ்பூன்
* தேங்காய் துருவல் – சிறிதளவு
* ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒன்றரை கப் அளவிற்கு கருப்பு அல்லது வெள்ளை உளுந்தை எடுத்து நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
உளுந்து நன்றாக ஊறிய பின்னர் ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இன்னும் சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரைத்து வைத்துள்ள உளுந்தை போட்டு சூடு செய்ய வேண்டும். கெட்டியாகாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உளுந்தின் பச்சை வாசனை போகும் வரை இதை கிளரி விட வேண்டும். பிறகு இதில் 6 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்க வேண்டும். அல்லது வெல்லம் இருந்தால் அதை பாகு செய்து அந்த பாகை வடிகட்டி இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு கிளறி விட்டு இறக்கி இதில் சிறிதளவு தேங்காய்த் துருவலையும், ஏலக்காய் சிறிதளவும் சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு இதை அப்படியே குடிக்கலாம். காலை நேரத்தில் மட்டும் தான் இந்த கஞ்சியை குடிக்க வேண்டும். ஏனெனில் இது செரிமானம் ஆக நேரம் எடுக்கும். வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த கஞ்சியை செய்து குடித்தால் போதும்.
எலும்புகள் அனைத்தும் இரும்பு போல பலம் பெறும். பெண்கள் அனைவரும் கட்டாயமாக இந்த கஞ்சியை குடிக்க வேண்டும். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை இந்த கஞ்சியை செய்து கொடுக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு வலிமை கிடைக்கும். தோல் இல்லாத வெள்ளை உளுந்து பாலுணர்வை தூண்டக் கூடிய சக்தி படைத்தது. மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும். தோலில் சுருக்கம், அரிப்பு போன்றவை வராமல் பாதுகாக்கும்.
என்னதான் பலன் பல இருந்தாலும்.உளுந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகின்றது. மேலும் சிறுநீரகத்திலும், பித்தப்பையிலும் கற்கள் உருவாகும். வாயுப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடிக்கக்கூடாது..
இந்த கஞ்சியில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள்களின் பலன்கள்:
உளுந்து நம் தசைகளையும் எலும்புகளையும் பலப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. நம் உடலில் ஹீமோ குளோபின் உற்பத்தியை அதிகரிக்க உளுந்து உதவுகின்றது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கின்றது. இதய ஆரோக்கியத்திற்கு உளுந்து நல்ல பொருள். நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்கக் கூடியது.
உளுந்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசயம் சத்துக்கள் நம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளையும் அதிகப்படியான நச்சுகளையும் நீக்குகின்றது. உளுந்து நம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் இதய் ஆரோக்கியமாக இருக்கும். உளுந்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துக்கள் இருப்பதால் எலும்புகள் பலப்படுகின்றது