நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு கனி போதும்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு கனி போதும்!

நெல்லிக்காயில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம்.

நம்முடைய அன்றாட வாழ்விற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் பழ வகைகளை சரிவர எடுத்துக் கொள்ளாமல் விடுவதன் காரணமாக உடலுக்கு பல விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்து கொள்வதற்கு மருத்துவமனைக்கு செல்கிறோம் ஆனால் அதனை நாம் சாப்பிடக்கூடிய பல வகைகளிலும் சரி செய்து கொள்ள முடியும். அதில் ஒன்று நெல்லிக்கனியாகும்.இதில் உள்ள அதிகப்படியான ஆன்டிஆக்சிடென்ட்கள் நம் உடலுக்கு பல விதமான நன்மைகளை தருகிறது.

நெல்லிக்காயில் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளதால் நம் உடலில் தொற்று நோய்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. நெல்லிக்காய் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை நீக்கி நம் சிறுநீரகத்தை பாதுகாக்கிறது.

நெல்லிக்காயினை தினசரி உட்கொண்டு வருவதன் காரணமாக நம் உடலில் குளுக்கோஸ்களின் அளவினை குறைப்பதற்கு உதவுகிறது.

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் தினசரி நெல்லிக்கனியை சாப்பிட்டு வருவதன் காரணமாக எல் டி எல் எனும் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து நம் உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.

நெல்லிக்கனியில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

Leave a Comment