வருடத்தில் அனைத்து மாதங்களிலும் தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!

Photo of author

By Divya

வருடத்தில் அனைத்து மாதங்களிலும் தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!

தங்கம் என்றால் ஒரு ஈர்ப்பு. அனைவருக்கும் தங்கத்தின் மீது மோகம் இருக்கும். தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் எதிர்கால நலனைக் கருதி பலரும் அதை சிறுக சிறுக சேமித்து வருகின்றனர்.

ஆனால் இதை எல்லோராலும் செய்ய முடிவதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தில் தங்கம் வாங்கும் சூழல் கைகூடாமல் போய்விடுகிறது. எந்த தடையாக இருந்தாலும் அவை நீங்கி தங்கம் குவிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

பணமோ, நகையோ அதற்கு உரிய மரியாதை கொடுத்தால் தான் அவை தங்கும். அதனால் தங்கத்திற்கு உரிய மரியாதையை அவசியம் கொடுக்க வேண்டும்.

வாசம் நிறைந்த பொருட்களுக்கு தங்கத்தை ஈர்க்கும் ஆற்றல் இருக்கிறது. எனவே தங்கம் உள்ள இடத்தில் சந்தனக் கட்டை, மல்லிகை பூ ஆகியவற்றை போட்டு வைக்கலாம்.

ஒரு சிவப்பு வெல்வெட் துணியில் தங்கத்தை வைத்தால் தங்கம் அதிகம் சேரும். ஒரு வெள்ளை காட்டன் துணியில் சிறிது பச்சைக் கற்பூரம், இலவங்கம் போட்டு வைத்தால் தங்கம் சேரும்.

தைல இலை, வெற்றிலை உள்ளிட்ட வாசனை நிறைந்த இலைகளை தங்கத்துடன் வைத்தால் அவை விரைவில் சேரத் தொடங்கும்.