மாதவிடாய் தள்ளி போக வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க் 5 தினங்களுக்கு முன்பு குடிங்க!!

Photo of author

By Divya

மாதவிடாய் தள்ளி போக வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க் 5 தினங்களுக்கு முன்பு குடிங்க!!

Divya

மாதந்தோறும் பெண்கள் சந்திக்கும் மாற்றங்களில் ஒன்று தான் மாதவிடாய்.பருவமடைந்த பெண்களுக்கு இந்த மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது.மாதவிடாய் சுழற்சி காலத்தில் பெண்கள் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.சிலர் தவிர்க்க முடியாத நேரத்தில் மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரை எடுத்துக் கொள்வார்கள்.ஆனால் இயற்கையான முறையில் மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பிஞ்சு வெள்ளரி – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு பிஞ்சு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வெள்ளரி பிஞ்சு ஜூஸை மாதவிடாய் காலத்திற்கு ஐந்து தினங்களுக்கு முன்பு பருகினால் பீரியட்ஸ் தள்ளி போகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

இந்த ரெடிமியை மாதவிடாய் காலத்திற்கு ஐந்து தினங்களுக்கு முன்பு முயற்சித்தால் தான் பலன் கிடைக்கும்.

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வெறும் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்க வேண்டும்.இப்படி நாளொன்றில் நான்கு முதல் ஐந்து முறை செய்து வந்தால் மாதவிடாய் தள்ளி போகும்.

தேவையான பொருட்கள்:-

1)பொட்டுக்கடலை – இரண்டு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

மாதவிடாய் காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த ரெமிடியை முயற்சித்தால் பலன் கிடைக்கும்.இரண்டு தேக்கரண்டி அளவு பொட்டுக்கடலையை காலை நேரத்தில் வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் மாதவிடாய் தாமதமாகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து பருகினால் மாதவிடாய் தள்ளி போகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

மாதவிடாய் தள்ளிப்போக வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்த ரெமிடியை பின்பற்றினால் பலன் கிடைத்துவிடும்.முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பருகினால் மாதவிடாய் தள்ளி போகும்.