மனிதர்களுக்கு நல்ல தூக்கம் அவசியமான ஒன்று.ஆனால் இன்று பலர் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.உடலுக்கு போதுமான ஓய்வு தூக்கத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது.அப்படி இருக்கையில் நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் நிச்சயம் உடல் நோய்வாய்ப்பட்டுவிடும்.
இன்றைய தலைமுறையினர் செல்போன் பயன்படுத்திக் கொண்டு உரிய நேரத்தில் தூங்காமல் இருக்கின்றனர்.இதனால் மன அழுத்தம்,மன உளைச்சல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.நீங்கள் நல்ல தூக்கத்தை அனுபவித்ததை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம்.அதேபோல் நாம் உறங்குவதால் நமது உடலில் இருக்கின்ற கழிவுகள் தானாக வெளியேற்றப்படுகிறது.தூங்கி எழுந்ததும் வாயில் துர்நாற்றம் வீசுதல்,கண்களில் ஒருவித பிசிபிசுப்பு உணர்வு,அடர் மஞ்சள் சிறுநீர் போன்றவை வெளிப்பட்டால் நீங்கள் நல்ல தூக்கத்தை அனுபவித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.இது உடல் கழிவுகள் வெளியேறி விட்டதை உணர்த்துகிறது.
நல்ல தூக்கத்தை அனுபவிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
1)இரவில் நேரமாக தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.அதற்கு முன்னர் இரவு உணவை நேரமாக முடித்துவிட வேண்டும்.
2)இரவு நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.காஃபின் பானங்கள் தூக்கத்தை இழக்க செய்யும்.
3)மின் விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டான அறையில் உறங்குவதை பழகிக் கொள்ள வேண்டும்.
4)பாலில் ஜாதிக்காய் பொடி கலந்து குடித்தால் குடித்தால் நல்ல தூக்கம் வரும்.தினமும் காலையில் எழுந்ததும் தியானம்,யோகா போன்றவற்றை செய்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
5)மனதில் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும.இரவில் மொபைல்,டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
6)பகல் நேரத்தில் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.இரவில் வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.