தலைமுடி கருமையாக மாற வேண்டுமா? அதற்கு அதிமதுரம் மட்டும் போதும்! 

Photo of author

By Rupa

தலைமுடி கருமையாக மாற வேண்டுமா? அதற்கு அதிமதுரம் மட்டும் போதும்!
நம்முடைய தலைமுடியை கருமையாக மாற்ற எளிமையான வழிமுறை ஒன்று குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம்மில் ஒரு சிலருக்கு தலைமுடி வெள்ளையாக இருக்கும். அதுவும் ஒரு சிலருக்கு தலைமுடி இளமையிலேயே வெள்ளையாக இருக்கும்.   இதனால் அவர்கள் விரைவில் வயாதனவர்களைப் போல தெரிவார்கள்.
இவர்கள் அனைவரும் தலைமுடியை இயற்கையாக கருப்பாக மாற்றாமல் தற்போதைய காலத்தில் செயற்கையாக தலைமுடியை கருமையாக மாற்றும் ஹேர் டை மற்றும் ஷேம்புகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் போகப் போக நம்முடைய தலைமுடி மிகவும் பாதிப்பு அடையும். மேலும் தலைமுடி வெள்ளையாகவும் இல்லாமல் கருப்பாகவும் இல்லாமல் செம்பட்டை வண்ணத்தில் மாறிவிடும். எனவே இந்த பதிவில் இயற்கையாக தலைமுடியை எவ்வாறு கருப்பாத மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.
அதற்கு தேவையான பொருட்கள்…
* அதிமதுரம்
* பால்
செய்முறை…
அதிமதுரம் நமக்கு பலவகையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கின்றது. அதே போல தலைமுடி பிரச்சனைக்கும் அதிமதுரம் நல்லதொரு தீர்வை கொடுக்கின்றது.
தலைமுடியை கருமையாக மாற்ற முதலில் அடுப்பை பற்றவைத்து பின்னர் அதில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ளை வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்த பின்னர் அதில் அதிமதுரத்தை போட்டு கொதிக்கவிட வேண்டும்.
அதன் பின்னர் காய்ச்சிய இந்த அதிமதுரத்தை எடுத்து பாலில் போட வேண்டும். பின்னர் அதிமதுரத்தை 15 நிமிடம் பாலில் அப்படியே ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழிந்து  அதிமதுரத்தை எடுத்து தலையில் தேய்க்க வேண்டும்.
தலையில் தேய்த்த பின்னர் 1 மணி நேரம் தலையை ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கருப்பாக மாறி விடும்.