பொறியியல் படிப்பில் சேர விரும்பினீர்களா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

Photo of author

By CineDesk

பொறியியல் படிப்பில் சேர விரும்பினீர்களா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

CineDesk

Want to get into engineering? Apply starting today!

பொறியியல் படிப்பில் சேர விரும்பினீர்களா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

பொறியியல் பகுதி நேர பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பத்தாள்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் பொறியியல் சேர்க்கை விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வருகிறது. உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதங்களை 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது.

பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க பல்கலைக்கழக மானியக் குழுவும், அகில இந்திய தொழில் நுட்ப  கல்வி குழுவும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியலில் கல்லூரியில் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடிந்து, பணிபுரியும் விண்ணப்பத்தார்களுக்கு பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் பாகூர், அரசு பொறியியல் கல்லூரிகள் காரைக்குடி, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜ பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்.

பகுதி நேர பொறியல் படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.ptbe-tnea.com என்று இணையதளத்தின் மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாத விண்ணப்பித்தார்கள் பி.இ. படிப்பில் சேர்வதற்காக விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் வாயில் பதிவு செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையத்தில் செய்து கொள்ளலாம். மேலும் இந்த கல்வி ஆண்டிற்காக பகுதி நேரம் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.