கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்!

Photo of author

By Parthipan K

கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்!

பொதுவாக ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் மார்கழி மாதத்தில் எவ்வாறு தீபம் ஏற்றினால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

பொதுவாக மார்கழி மாதம் என்றாலே பெருமாள் ஆண்டாள் மகாலட்சுமி தாயாரை தான் வணங்குவோம். இவ்வாறு பூஜை செய்யும் பொழுது நம் வீட்டில் வற்றாத செல்வங்கள் நிறைந்திருக்கும். பொதுவாக நாம் பூஜையறையில் காமாட்சி விளக்கு ஏற்றுவது வழக்கம் தான். நம் வீட்டில் இருக்கக்கூடிய பெருமாள் மற்றும் ஆண்டாள் படத்தை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து. வாசனையான மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

அதன் பிறகு வீட்டில் தினமும் நெய் தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சுத்தமான பசு நெய்யினால் விளக்கேற்றினால் மிகவும் சிறப்பு. வீட்டில் நெய் தீபம் ஏற்றினால் பண வரவு அதிகரிக்கும்.

மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்த தீபம் என்றால் அவை கல் உப்பு தீபம் தான். நாம் பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய தட்டின் மேல் மஞ்சள் குங்குமம் வைத்து. அதன் மேல் இரண்டு அகல் தீபம் பயன்படுத்தப்படும். ஒரு அகல் விளக்கில் கல் உப்பை நிறைக்க வேண்டும். அதன் பிறகு அந்த தட்டை பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

நாம் உப்பு வைத்துள்ள அகல் விளக்கின் மீது மூன்று ஏலக்காய் வைக்க வேண்டும். மற்றொரு அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். இந்த உப்பு மற்றும் ஏலக்காயை வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். மார்கழி மாதம் முழுவதுமே இந்த விளக்கை ஏற்றினால் கடன் தொல்லை என்பதை இருக்காது.