முகத்தில் உள்ள முகப்பருக்கள் மறைய வேண்டுமா? இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்!
நம்மில் ஒரு சிலருக்கு உடல் சூடு காரணமாக முகத்தில் முகப்பருக்கள் தோன்றும். மேலும் எண்ணெய் சார்ந்த உணவு பொருட்களை அதிகமாக சாப்பிடுவதாலும், முகத்திற்கு பயன்படுத்தப்படும் மேக்கப் பொருட்களினாலும் முகப்பருக்கள் தோன்றும்.
இந்த முகப்பருக்களை மறையச் செய்ய அனைவரும் அவர்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை செய்வார்கள். ஆனால் என்ன செய்தாலும் பலன் கிடைக்கும். ஆனால் நாளடைவில் முகப்பருக்கள் மீண்டும் தோன்றும். எனவே முகப்பருக்களை முற்றிலுமாக மறையச் செய்ய எளிமையான வீட்டு வைத்தியமுறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* அல்லி இதழ்கள்
* சந்தனம்
செய்முறை:
சந்தனத்தை சாதாரணமாக தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து வந்தாலே முகப்பருக்கள் மறையும். இதனுடன் அல்லி இதழ்களையும் சேர்த்து பயன்படுத்தினால் முகப்பருக்கள் என்பது முற்றிலுமாக மறைந்து விடும்.
முதலில் அல்லி இதழ்கள் சிறிதளவு எடுத்து மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த மிக்சி ஜாரில் சிறிதளவு சந்தனத்தை சேர்த்துக் கொள்ளை வேண்டும்.
இறுதியாக இதை நன்கு அரைத்துக் கொள்ளை வேண்டும். பின்னர் இந்த கலவையை இரவு நேரத்தில் முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் காலையில் எழுந்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள முகப்பருக்கள் முற்றிலும் மறையும்.