நாள்பட்ட சளித் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா?? இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்க!!

0
129
#image_title

நாள்பட்ட சளித் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா?? இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்க!!

நாள்பட்ட நெஞ்சு சளி, நாள்பட்ட தொண்டை சளி, தொடர் இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் தினமும் கஷ்டப்பட்டு வந்திருப்போம். எத்தனையோ மாத்திரை சாப்பிட்டும் பலன் இல்லாமல் போயிருக்கும். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த பொடியை தயார் செய்து அரைஸ்பூன் சாப்பிட்டாலே நெஞ்சு சளி, தொண்டை சளி எல்லாம் கரைந்து வெளியே வந்துவிடும். அதுமட்டுமில்லாமல் இருமல், காய்ச்சல் போன்ற நோய்களும் குணமாகும். இந்த ஆரோக்கியமான பொடியை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

இந்த பொடியை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* சுக்கு பொடி

* மிளகு பொடி

* மஞ்சள் பொடி

* தேன்

 

இந்த பொடியை தயார் செய்யும் முறை…

 

ஒரு சிறய பாத்திரம்(Bowl) ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் அளவு சுக்குப் பொடியை சேர்த்துக் கொள்ளவும். பிறகு கால் ஸ்பூன் அளவு மிளகு பொடி சேர்த்துக் கொள்ளவும். பிறகு கால் ஸ்பூன் அளவுக்கும் குறைவாக மஞ்சள் பொடியை இதில் சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக இதில் தேன் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளவும்.

 

பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ளவும். பேஸ்ட் பதத்திற்கு வரும் அளவு கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதில் அரை ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டால் போதும். நெஞ்சில் கட்டியிருக்கும் சளி, தொண்டையில் கட்டியிருக்கும் சளி எல்லாம் கரைந்து வெளியே வந்துவிடும். இருமல் சரியாகிவிடும். காய்ச்சல் குணமாகிவிடும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

 

சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் பொழுது தினமும் காலையிலும் மாலையிலும் உணவு சாப்பிட்ட பிறகு இந்த பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரம் இரண்டு முறை இதை சாப்பிட வேண்டும்.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டிப்ஸ்…

 

* தினமும் காலையில் வெறும் வயிற்றில் 6 துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லவும். மென்று வரும் உமிழ்நீரை சிறிது சிறிதாக விழுங்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

* அது போல தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

* வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது வெளியே உள்ள கிருமிகள் நம்மை தீண்டாமல் இருக்க கிராம்பு ஒன்றை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு செல்லலாம். பிறகு அதிலிருந்து வரும் உமிழ்நீரை சிறிது சிறிதாக விழுங்க வேண்டும். இது நம்மை கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.