முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? இதோ சிம்பிளான இரண்டு வழிமுறைகள்!

0
165
#image_title

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? இதோ சிம்பிளான இரண்டு வழிமுறைகள்!

நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிமையாக மறையச் செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம். அதில் ஒன்று எலுமிச்சை. எலுமிச்சையை முகத்தின் பொலிவுக்கும் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை சருமத்தின் பாதுகாப்பிற்கு மிகுந்த நன்மை பயக்கக் கூடிய ஒரு பொருள். எலுமிச்சையை சாதாரணமாக முகத்தில் தேய்த்தாலே சருமம் பொலிவு.பெறத் தொடங்கும் என்பார்கள். அந்த வகையில் எலுமிச்சையுடன் மேலும் இரண்டு பொருட்களை தனித்தனியாக சேர்த்து பயன்படுத்தி முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நாம் அகற்றலாம்.

எலுமிச்சையை பயன்படுத்தி எவ்வாறு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்வது என்பது குறித்த இரண்டு வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

வழிமுறை 1…

தேவையான பொருட்கள்…

* எலுமிச்சை
* முட்டையின் வெள்ளைக் கரு

செய்முறை…

முதலில் ஒரு சிறிய பவுல் எடுத்து அதில் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். பின்னர். இதில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை நம்முடைய முகம் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும். இது நன்கு காய்ந்த பிறகு நம்முடைய முகத்திற்கு மாஸ்க்கை பயன்படுத்தினால் எவ்வாறு உரித்து எடுப்போமோ அதே போல உரித்து எடுக்க வேண்டும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

வழிமுறை 2…

தேவையான பொருட்கள்…

* எலுமிச்சை
* ரோஸ் வாட்டர்

செய்முறை…

ஒரு சிறிய பவுலில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு காட்டன் துணியை எடுத்து அந்த துணியை இந்த கலவையில் நினைத்து பின்னர் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் கலவையை நினைத்த காட்டன் துணியை வைக்க வேண்டும். அதன் பின்னர் 3 அல்லது 4 நிமிடம் கழிந்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து விடும்.

இந்த வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை ஒரு நாளுக்கு இரண்டு முறை செய்து வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பின்குறிப்பு: எலுமிச்சை நம்முடைய சருமத்தை வறட்சி அடையச் செய்யும். அதனால் சருமத்திற்கு எலுமிச்சை பயன்படுத்திய பின்னர் சருமத்திற்கு மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.

Previous articleஇளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!
Next articleசருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் குளியல் பொடி!! இதை தயாரிப்பது சுலபமே!