நெஞ்சு சளி வறட்டு இருமல் 5 நிமிடத்தில் குணமாக வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

Photo of author

By Divya

நெஞ்சு சளி வறட்டு இருமல் 5 நிமிடத்தில் குணமாக வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

மார்பில் சளி கோர்த்துக் கொண்டாலோ, வறட்டு இருமல் வந்தாலோ கடுமையான பாதிப்பு ஏற்படும். வறட்டு இருமலால் தொண்டையில் வலி, புண் ஏற்படும். அதேபோல் நெஞ்சு சளி உருவானால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள சிலர் மாத்திரை உட்கொள்வார்கள். ஆனால் மாத்திரை ஒருசிலருக்கு ஒற்றுக் கொள்ளாமல் உபாதை ஏற்படுத்தும்.

எனவே விட்டில் உள்ள பொருட்களை கொண்டு நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமலுக்கு தீர்வு காணுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:

1)இஞ்சி
2)துளசி
3)வெற்றிலை
4)மிளகு
5)தேன்

பயன்படுத்தும் முறை:

சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும். அடுத்து 15 துளசி இலை மற்றும் அரை வெற்றிலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து இஞ்சி சாறில் கலந்து கொள்ளவும்.

அதன் பின்னர் 2 மிளகை உரலில் போட்டு இடித்து பிழிந்து வைத்துள்ள சாற்றில் போட்டு கலந்து விடவும். இறுதியாக 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிடவும். இதை சாப்பிட்ட 5 நிமிடத்தில் நெஞ்சு சளி, வறட்டு இருமல் முழுமையாக குணமாகும்.