செலவின்றி இடுப்பு வலி நீங்கணுமா? அப்போ கட்டை விரலை கொண்டு இந்த இடத்தை அழுத்துங்கள்!!

Photo of author

By Divya

செலவின்றி இடுப்பு வலி நீங்கணுமா? அப்போ கட்டை விரலை கொண்டு இந்த இடத்தை அழுத்துங்கள்!!

Divya

ஆண்,பெண் என்று அனைவருக்கும் இடுப்பு வலி ஏற்படுகிறது.அடிக்கடி குனிந்து வேலை செய்தல்,கால்சியம் குறைபாடு,வயது முதுமை போன்ற காரணங்களால் இடுப்பு வலி பிரச்சனையை அனுபவிக்க நேரிடுகிறது.ஆண்களைவிட பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு பொதுவான பிரச்சனையாக மாறிவருகிறது.

பிரசவித்த பெண்கள்,30 வயதை கடந்த பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு அதிகரிக்கிறது என்று ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது.முந்தைய காலங்களில் இடுப்பு வலி பாதிப்பு உள்ளது என்று குறைவான நபர்களே கூறினர்.அதுவும் வயதானவர்களுக்கு மட்டும் தான் இந்த இடுப்பு வலி பாதிப்பு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது சிறு வயதினருக்கு கூட இடுப்பு வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

இந்த இடுப்பு வலி பாதிப்பை நமது முன்னோர்கள் கண்டுபிடித்த வர்மக்கலை மூலம் எளிதில் குணப்படுத்த முடியும்.நம் முன்னோர்கள் ஏரளமான வர்மக்கலையை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்தனர்.ஆனால் தற்பொழுது வர்மக்கலை அழிந்து வருவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

நமது உடலில் 500க்கும் அதிகமான வர்ம புள்ளிகள் இருக்கிறது.மேல் தட்டு வர்மம்,மூட்டு வர்மம்,கால் பெருவிரல் வர்மம,சுழி வர்மம்,நட்டல் வர்மம்,கச்சை வர்மம்,பூட்டு வர்மம் என்று 553 வர்ம புள்ளிகள் இருக்கிறது.இதுபோன்ற வர்மக்கலைகள் மூலம் நமது இடுப்பு வலியை எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

இடுப்பு வலி பாதிப்பு இருப்பவர்கள் தரையில் பாய் போட்டு குப்புற படுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இடுப்பு பகுதியில் இரண்டு குழி போன்ற அமைப்பு இருக்கும்.அவற்றின் மீது கை கட்டை விரலை வைத்து கடிகார திசையில் 5 முறை மற்றும் கடிகார திசைக்கு எதிர் திசையில் 5 முறை என்று அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும்.

பிறகு இலுப்பை எண்ணையை லேசாக சூடாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஊற்றி இரண்டு கட்டை விரலை வைத்து தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் இடுப்பு வலி பாதிப்பு குணமாகிவிடும்.வாரத்தில் ஒருமுறை உடலில் எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்து குளித்து வந்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.