திருமண தடைகள் நீங்க வேண்டுமா? இந்த எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றுங்கள்!

0
204

திருமண தடைகள் நீங்க வேண்டுமா? இந்த எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றுங்கள்!

கோவிலுக்கு செல்லும் பொழுது பொதுவாகவே நல்லெண்ணெய் விளக்கு நெய் விளக்கு போன்றவைகள் ஏற்றுவது வழக்கம்தான். நல்லெண்ண இயற்றினால் அதற்கான பழங்களும் நீயேற்றினால் அதற்கான பலன்களும் நமக்கு கிடைக்கும். இந்த வகையில் நெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். மேலும்

நம் பூஜை அறையிலும் தீபம் ஏற்றுவது பொதுவான ஒன்றாகும்.தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து வாசம் செய்வாள் என கூறப்படுகிறது. தீபத்தின் சுடரில் திருமகளான லட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம்.

அதனால் தான் வீட்டில் காலையும், மாலையும் ஏற்றி வழிபடுவார்கள். அவ்வாறு ஏற்றப்படும் தீபத்தில், முப்பெருந்தேவியரும் எழுந்தருளி கடாட்சம் தருவதாக நம்பிக்கை.

மேலும் குறிப்பாக, இரண்டு திரிகளை ஒன்றாக்கி விளக்கேற்றுவது மிகவும் விசேஷம். கணவன் ஒரு திரி, மனைவி மற்றொரு திரி. இப்படி இரண்டு திரிகளை இணைத்து விளக்கேற்றினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.

அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அதனால் நாம் நினைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும்.

தீப எண்ணிக்கையின் பலன்கள் :கல்வியும், ஞானமும் பெற 5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த.

நவகிரக தோஷம் நீங்கும்.9 நெய் விளக்கு ஏற்ற வேண்டும்.வேலையில் ஏற்பட்ட தடைகள் நீங்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும்12 நெய் விளக்கு ஏற்ற வேண்டும்.காலசர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் நீங்க 18 நெய் விளக்கு ஏற்றினால் சிறப்பு.

திருமணத்தடை நீங்க. குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் 27 நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

நெய் விளக்கு ஏற்றிய பிறகு கோவில் பிரகாரத்தை 3 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Previous articleவிருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!
Next articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!