முழங்காலில் உள்ள கருமை மறைய வேண்டுமா! தயிரை இப்படி பயன்படுத்துங்க !!

0
79
#image_title
முழங்காலில் உள்ள கருமை மறைய வேண்டுமா! தயிரை இப்படி பயன்படுத்துங்க
நம்முடைய முழங்கால்களில் உள்ள கருமையான நிறத்தை மறைய வைக்க இந்த பதிவில் தரமான மூன்று டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று வழிமுறைகளும் முற்றிலும் இயற்கையான மற்றும் எளிமையான வழிமுறைகள் ஆகும்.
நம்முடைய முழங்கால் பகுதிகள், முழங்கைகள், அக்குள் பகுதிகளில் கருமை நிறம் தோன்றும். சருமத்தில் மெலனின் அதிகரிப்பால் இந்த கருமை நிறம் தோன்றுகின்றது. கவலை வேண்டாம். இதற்கு நாம் தயிரை பயன்படுத்தலாம்.
தயிரை பயன்படுத்தும் பொழுது இந்த கருமையான நிறம் விரைவில் மறைந்து விடுகின்றது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் நமது முழங்கால்கள், முழங்கைகள்,  அக்குள் பகுதிகளில் உள்ள கருமையை மறையச் செய்கின்றது. மேலும் தயிருடன் ஒரு சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் பொழுது கருமை நிறத்தை விரைவாக மறையச் செய்யலாம்.
கருமை நிறத்தை மறையச் செய்ய தயிரை பயன்படுத்தும் மூன்று முறைகள்…
* முதலில் ஒரு ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை கடுமையான நிறங்கள் உள்ள பகுதிகளில் தேய்த்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் கழுவி விடலாம். இதை தினமும் செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.
* அதே போல ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இதை கருமையான இடங்களில் தேய்க்க வேண்டும். பின்னர் 20 முதல் 25 நிமிடம் கழிந்து கழுவி விடலாம். இதன் மூலம் கருமை வேகமாக மறையும்.
* அதே போல தயிரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து இதை கருமை நிறம் உள்ள இடங்களில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதை வாரம் 2 முறை செய்யலாம்.
Previous articleஆபத்தான வெள்ளை சர்க்கரை! இதற்கு மாற்றாக இந்த 5 பொருட்களை பயன்படுத்துங்க !!
Next articleவயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி! இதை ஒழிக்க இந்த இரண்டு பொருட்கள் போதும் !!