உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை குறைய வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை எடுத்துக் கொண்டாலே போதும்

Photo of author

By Amutha

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை குறைய வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை எடுத்துக் கொண்டாலே போதும்

Amutha

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை குறைய வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை எடுத்துக் கொண்டாலே போதும்! 

உடல் எடையினால் அழகை இழக்கிறார்கள். விரும்பிய உடையை அணிய முடிவதில்லை. உடல் பருமனால் இதய நோய், நுரையீரல் செயல்பாடு, கல்லீரல் குறைபாடு, சிறுநீரக செயல் இழப்பு, இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகிறது.

உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், இனிப்புகளை முடிந்தவரை குறைக்க வேண்டும். அதிகப்படியான கலோரி கொண்ட உணவுகளை உண்டால், உடற்பயிற்சியோ அன்றாட வீட்டு வேலைகளை அவசியம் செய்ய வேண்டும். இல்லையென்றால் எரிக்கப்படாத கலோரிகள் அதாவது பயன்படுத்தப்படாத ஆற்றலானது கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கிறது. இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்கும் ஒரு அற்புத ஜூஸ் தயாரிக்க முறையைப் பார்ப்போம்.

** இரண்டு துண்டு வெண்பூசணி எடுத்துக்கொண்டு அதன்மேல் ஓடு போன்ற தோல் மற்றும் உட்பகுதியில் உள்ள விதைகளை நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிரஷான வெண்பூசணியை பயன்படுத்தவும். ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டது வேண்டாம்.

** ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த வெண் பூசணி துண்டுகள், ஒரு கொத்து கருவேப்பிலை, சிறிது கொத்தமல்லி தழை, ஐந்து மிளகு இவற்றை சேர்த்து இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து  நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**  இதை ஒரு டம்ளரில் வடிகட்டி கொண்டு தேன் அல்லது உப்பு சேர்த்து பருகலாம். ஆஸ்துமா இருப்பவர்கள் தாராளமாக இதை குடிக்கலாம். சளி பிடிக்கும் என்ற கவலை வேண்டாம் இதனால் சளி பிடிக்காது.

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் இவற்றை சரி செய்யும். உடலில் உள்ள நாள்பட்ட நச்சுக்களை நீக்கி தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை கணிசமான அளவில் குறைக்கும். உடலை சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது.