சிறுநீர் தொற்று அரிப்பு புண் நீங்க வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

0
580
#image_title

சிறுநீர் தொற்று அரிப்பு புண் நீங்க வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இந்த சிறுநீர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இது குழந்தைகளுக்கும் அதிகமாக வரக்கூடியதாக இருக்கிறது. இந்த சிறுநீர் தொற்று ஏற்பட்டால் சிறுநீர் பாதையில் புண், அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும். மேலும் இது குழந்தைகளுக்கும் ஏற்படும் குழந்தைகளுக்கு நன்றாக தண்ணீர் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நன்றாக தண்ணீர் கொடுத்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். பிறகு சிறுநீர் வெளியேறிய பிறகு அந்த இடத்தை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு இது மட்டும் செய்தால் இந்த பிரச்சனை ஏற்படாது. மேலும் பெண்களுக்கு இந்த சிறுநீர் தொற்று பிரச்சினையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் திரிபலா பொடி ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். திரிபலா பொடியானது. அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகும். சிறுநீர் தொற்று உள்ள இடங்களில் இந்த தண்ணீரை ஊற்றி நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரு வேலைகளும் செய்துவர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.

இவ்வாறு செய்வதன் மூலம் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. சிறுநீர் பாதை சிறுநீர் பைகளில் உள்ள கிருமிகளை அழிக்க முதலில் 50 கிராம் அளவு தாமரை பூ பொடி 50 கிராம் அளவு சிறுகண்பீளை பொடி இரண்டு பொடிகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியது. இந்த இரண்டு பொடியில் இருந்தும் 1/2 ஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 200 மிலி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும் கொதித்த பிறகு வடிகட்டி காலை ,மாலை என இரு வேலையிலும் குடிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதங்கள் குடித்து வர வேண்டும். இவ்வாறு குடித்து வருவதன் மூலம் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது. சர்க்கரை நோயாளிகள் இவ்வாறு செய்வதன் மூலம் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. மேலும் இது சிறுநீரகத்தை நன்றாக சுத்தம் செய்யக்கூடிய தன்மை கொண்டது.

Previous articleசர்க்கரை நோய் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? ஒரு கைப்பிடி வெந்தயம்!
Next articleதலைமையுடன் பிரச்சனையா? டெல்லி பயணம் குறித்து அண்ணாமலை அளித்த விளக்கம்