பண மழையில் நனைய ஆசையா? அப்போ இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

பண மழையில் நனைய ஆசையா? அப்போ இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்யுங்கள்!!

ஒரு சிறிய வெள்ளி நாணயம் எடுத்து ஒரு சிறிய பர்ஸ் அல்லது கவரில் போட்டு உங்கள் தலையணைக்குள் வைத்துப் படுத்து உறங்கவும்.

நாணயம் இல்லாதவர்கள் 1 கிராம் வெள்ளி நாணயத்திற்கு உரிய பணத்தை வியாழக் கிழமை மதியம் 1 – 1.30 மணிக்குள் ஒன்று வாங்கி இதேபோல் செய்யுங்கள்.

காலையில் தூங்கி எழுந்ததும் வீட்டில் உள்ள ஜன்னல்களை சிறிது நேரமாவது முழுமையாக திறந்து வைக்க வேண்டும். ஏனென்றால் சூரிய ஒளியின் ஆற்றலும் காற்றின் ஆற்றலும் நம் இல்லத்திற்கு மிகவும் அவசியம். இவ்வாறு திறந்து வைக்கும் பொழுது தான் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகி செல்வம் தங்கும். ஜன்னல்கள் திறக்கும்படி வீடு அமையப் பெறாதவர்கள் வார்தத்தில் 2 நாட்கள் பஞ்ச கவ்ய விளக்கு கட்டாயம் ஏற்ற வேண்டும்.

வீட்டு பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாசனை நிறைந்த பச்சை கற்பூரம், சோம்பு, துளசி, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை பணம் இருக்கும் பெட்டியில் வைக்கவும்.

மாதம் ஒரு முறை உங்கள் பீரோவிற்குப் பின் பக்கம் ஒட்டடை அடித்து கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால் பீரோவில் தான் பணத்தை வைத்து எடுக்கிறோம். பீரோ உள் பக்கம் மட்டும் அல்ல வெளிப் புறமும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

அதேபோல் வருடத்திற்கு ஒருமுறை உங்கள் பரண்களில் உள்ள பொருட்களைத் துடைத்து அங்கு ஒட்டடை அடித்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் வீண் விரயம் இல்லாமல் வீட்டில் பணம் தங்க ஆரமிக்கும்.