இன்றைய காலத்தில் உருவ கேலி என்பது சாதாரணமாகிவிட்டது.ஒருவரின் நிறம்,உடல் அமைப்பு,உயரம் போன்றவற்றை வைத்து மதிப்படுபவர்கள் அதிகம்.மற்றவர்களை உடல் அளவில் ஈர்க்க உயரம் முக்கியமான ஒன்றாக உள்ளது.
உயரம் என்பது அவரவர் மரபணு மாற்றத்தை பொறுத்து உள்ளது.நீங்கள் உங்கள் உயரத்தை அதிகரிக்க விருப்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வாருங்கள்.
பாதாம் மில்க் குடித்தால் உயரமாக வளர முடியும் போன்ற விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள்.உடல் உயரத்தை அதிகரிக்கும் ஆற்றல் பாதாமிற்கு உண்டு.வளரும் குழந்தைகளுக்கு தினமும் பாதாம் பால் கொடுக்க வேண்டும்.
பாதாம் பால் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன?
1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)பாதாம் – 10
3)அஸ்வகந்தா பொடி – அரை தேக்கரண்டி
4)தேன் அல்லது பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
முதலில் பாத்திரம் ஒன்றில் 10 பாதாம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நாள் முழுவதும் ஊறவிடுங்கள்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பால் பச்சை வாசனை நீங்கியதும் அரைத்த பாதாம் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்து நாட்டு மருந்து கடையில் கிடைக்கூடிய அஸ்வகந்தா பொடியை வாங்கி அரை தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.
அதன் பிறகு சுவைக்காக தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.பெரியவர்களும் இந்த பாதாம் பாலை பருகலாம்.இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் உடல் உயரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.