சளி உடனே குணமடைய வேண்டுமா? அப்போ ஓமத்தை இப்படி செய்யுங்க! 

மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பொதுவான நோய்த் தொற்று என்னவென்றால் அது சளி தான். சளி தான் அனைத்து நோய்களுக்கும் காரணமாக அமையும்.

சளி ஏற்பட்டுவிட்டால் கூடவே இருமல், காய்ச்சல் போன்ற தொற்றுகளும் இலவச இணைப்பாக நமக்கு ஏற்படும். இதற்கு நாம் மருத்துவரிடம் சென்று பணம் செலவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தாலும் ஒரு சிலருக்கு சளித் தொற்று விரைவில் குணமடையாது. எனவே சளியை வேகமாக குணமாக்க நாம் ஓமத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்…

* ஓமம்

* மிளகு

* பால்

* பனங்கற்கண்டு

செய்முறை….

முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் பால் தேவையான அளவு சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் ஓமம் சிறிதளவு சேர்க்க வேண்டும். பிறகு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். அதன் பிறகு மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதிக்க வைக்கும் பொழுது மிளகு மற்றும் ஓமத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் பாலில் இறங்கும். மேலும் இதில் சுவைக்காக சேர்க்கப்பட்டுள்ள பனங்கற்கண்டும் சத்து மிக்கது.

பால் நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அனைத்து விட்டு இதை இறக்கி விட வேண்டும். இளச்சூடாக ஆறிய பின்னர் நாம் பாலை குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சளி உடனே குணமாகும்.