பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!

Photo of author

By Parthipan K

பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!

Parthipan K

பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!

 

வீட்டில் உள்ள ஒரு சில விஷயங்களை நம் வீட்டில் இருந்து அகற்றாத வரை செல்வம் என்பதே தங்காது. சில பொருட்கள் வீட்டில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அதன் மூலம் பணம் வரவு தடுக்கப்படுகிறது. மேலும் வீட்டில் நடக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகளையும் அவை தடுத்து நிறுத்துகிறது. உடைந்த கண்ணாடி, முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி ஜன்னல், கண்ணாடி வளையல் கண்ணாடியால் ஆன எந்த பொருளும் உடைந்து நம் வீட்டில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பதன் மூலம் அதிக அளவு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுகின்றது.

அதனையடுத்து கிழிந்த ஆடைகள், பழைய துணிகள் போன்றவைகளை சிலர் மூட்டையாக கட்டி வீட்டில் வைத்திருப்பார்கள். அவ்வாறு வைத்திருப்பவர்கள் உடனடியாக அதனை அகற்ற வேண்டும். அதன் பிறகு நாம் தினந்தோறும் பயன்படுத்தும் நாற்காலி, சோபா, போன்றவைகள் உடைந்து இருக்கக் கூடாது. அதனை உடனடியாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு இருந்தால் நம் வீட்டில் தரித்தரம் பெருகும். நாம் படுக்கும் கட்டில் உடைந்திருக்கக் கூடாது. சாமி படங்கள் மற்றும் சாமி சிலைகள் உடைந்திருந்தால் அதனை உடனடியாக மாற்ற வேண்டும். வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம் தேய்ந்திருந்தால் அதனை உடனடியாக மாற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது கஷ்டம் பணவிரயம் ஏற்படும்.