எலும்புகளை வலிமையாக வைக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!
நம்முடைய எலும்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து எலும்புகளுக்கு தேவையான வலிமையை தரும் உணவு வகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் சத்துக்கள் தேவை. கால்சியம் சத்துக்கள் பற்றாகுறை ஏற்பட்டால் எலும்புஙள் பலவீனம் ஆகும். எனவே இந்த பதிவில் நம்முடைய எலும்புகளை பலமாக்கும் உணவு வகைகள் என்னென்ன என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
எலும்புகளை வலிமையாக்கும் உணவு வகைகள்…
* எலும்புகளை வலிமையாக நாம் ராகியை உட்கொள்ளலாம். ராகியில் ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இவை நம்முடைய எலும்புகளை வலிமையாக்க உதவி செய்யும்.
* எலும்புகளை வலிமையாக்க நாம் மற்றொரு முறையை பயன்படுத்தலாம். அதாவது சூடான பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து கலந்துவிட்டு குடிக்கலாம். இதை நாம் குடிப்பதால் மூட்டு வலி பிரச்சனையும் குறையும். சர்க்கரை நோயும் குறையும்.
* எலும்புகளை வலிமையாக்க முக்கியமாக நாம் சாப்பிட வேண்டிய பொருள் அன்னாசி பழம் தான். ஏனென்றால் அன்னாசி பழத்தில் கால்சியம், விட்டமின் சி ஆகிய சத்துக்கள் இருக்கின்றது. இவை நம்முடைய எலும்புகளுக்கு வலிமையை தருகின்றது.
* எலும்புகளை வலிமையாக மாற்ற நாம் முட்டை கோஸ் சாப்பிடலாம் அதே போல ப்ரோகோலியையும் சாப்பிடலாம்.
* எலும்புகளை வலிமையாக்க நாம் நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். நட்ஸ் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றது.