உங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.இரத்த சர்க்கரை உயரந்தால் இரத்த அழுத்தம்,மயக்கம்,தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நாம் மூலிகை வைத்தியத்தை பின்பற்றலாம்.கொய்யா இலை,நாவல் இலை,வேப்பிலை போன்று கறிவேப்பிலையும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.இந்த கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு எகிறாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை – கால் கப்
2)கடலை பருப்பு – இரண்டு தேக்கரண்டி
3)வெள்ளை உளுந்து – இரண்டு தேக்கரண்டி
4)கருப்பு மிளகு – கால் தேக்கரண்டி
5)வரமிளகாய் – இரண்டு
6)வர மல்லி – இரண்டு தேக்கரண்டி
7)உப்பு – சிறிதளவு
8)பெருங்காயப் பொடி – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் கால் கப் கருவேப்பிலை இலையை ஒரு வாணலியில் போட்டு மொரு மொருனு வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
2.பின்னர் வாணலியில் இரண்டு தேக்கரண்டி கடலை பருப்பு,இரண்டு தேக்கரண்டி வெள்ளை உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
3.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி வர மல்லி,இரண்டு வர மிளகாயை வாசனை வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
4.இப்பொழுது வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
5.பின்னர் இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் கொட்ட வேண்டும்.அதன் பிறகு கால் தேக்கரண்டி பெருங்காயத் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:-
இந்த கறிவேப்பிலை பொடியில் சிறிது நல்லெண்ணெயில் போட்டு குழைத்து சூடான பழுப்பு அரிசி சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.