தலை முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா!! உப்பை இவ்வாறு பயன்படுத்துங்க!!! 

0
28
want-to-keep-your-hair-healthy-use-salt-like-this
#image_tiwant-to-keep-your-hair-healthy-use-salt-like-thistle

தலை முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா!! உப்பை இவ்வாறு பயன்படுத்துங்க!!!

நம்முடைய தலைமுடி ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்றால் உப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் உப்பை பயன்படுத்தும் பொழுது தலைக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நாம் நம்முடைய சருமத்தின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவுக்கு நமது தலை முடியின்  ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.தலைமுடி ஆரோக்கியம் இருக்க நாம் வித்தியாசமான எண்ணெய்கள், ஷாம்பு போன்று பலவிதமான வழிமுறைகளை பின்பற்றி வருகின்றோம்.

அந்த வகையில் நாம் கல்லுப்பை தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் பல நன்மைகள் நமது தலை முடிக்கு கிடைக்கின்றது.அதாவது சாதாரண கல் உப்பு கிடையாது. நாம் கடல் கல் உப்பை தலை முடிக்கு பயன்படுத்த வேண்டும்.

நேரடியாக பயன்படுத்தும் பொழுது கல் உப்பு நம் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பல பாதிப்புகளை தரும்.இதனால் கூந்தலுக்கு கடல் கல் உப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றால் கடல் கல் உப்பை வைத்து ஸ்பிரே தயாரித்து பயன்படுத்தலாம்.

கடல் கல் உப்பை ஸ்பிரே செய்து தலைக்கு பயன்படுத்தும் பொழுது அதிக நேரம் அப்படியே வைக்கக் கூடாது. தலைக்கு கடல் கல் உப்பு ஸ்பிரே தயாரித்து பயன்படுத்தி 10-15 நிமிடங்களுக்குள் தலையை அலச வேண்டும்.கடல் கல் உப்பு கூந்தலுக்கு நல்லது என்றாலும் இதை அதிகமாக பயன்படுத்தக் கூடாது.ஏன் என்றால் பல பாதிப்புகளை கூந்தலுக்கு தரும்.

கடல் கல் உப்பை கூந்தலுக்கு பயன்படுத்தும் பொழுது சில நன்மைகள் கிடைக்கின்றது. கடல் கல் உப்பை கூந்தலுக்கு பயன்படுத்தும் பொழுது கூந்தல் அடர்த்தி அதிகரிக்கின்றது.கடல் கல் உப்பை கூந்தலுக்கு பயன்படுத்தும் பொழுது தலையில் பொடுகுத் தொல்லை இருக்காது.கடல் கல் உப்பு தலையில் உள்ள எண்ணெய் பசை பிரச்சனையை நீக்கும்.கடல் கல் உப்பை பயன்படுத்தும் பொழுது மிருதுவான கூந்தல் கிடைக்கும்.