கூந்தலை சாப்டாக மென்மையாக வைக்க வேண்டுமா!! அப்போ ஹேர் சீரமை இவ்வாறு பயன்படுத்துங்க!!
கூந்தலை சாப்டாக அதாவது மென்மையாக வைத்துக் கொள்ள உதவும் ஹேர் சீரமை எவ்வாறு.பயன்படுத்துவது, இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலில் ஹேர் சீரம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும். ஹேர் சீரம் என்பது சிலிகான் அடிப்படையிலான திரவ தயாரிப்பு ஆகும். இது தலைக்கு குளித்த பிறகு தலை முடியை மென்மையாக வைத்துக் கொள்ள தலையின் மேற்பரப்பில் பூசப்படும்.
ஹேர் சீரமை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
* நமது தலை முடிக்கு தகுந்த வகையில் உள்ள ஹேர் சீரம்களை நாம் தேர்தெடுக்க வேண்டும். அதாவது தலை முடி.சிலருக்கு சுருண்டு இருக்கும். சிலருக்கு அடர்த்தியாக இருக்கும். ஒரு சிலருக்கு மென்மையாக இருக்கும். அதனால் அவர்களின் தலை முடிக்கு தகுந்தது போல ஹேர் சீரமை தேர்ந்தெடுக்கவும்.
* கெரட்டின் சத்துக்கள் அதிகம் உள்ள ஹேர் சீரமை தேர்ந்தெடுத்து தலைக்கு முடிக்கு பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
ஹேர் சீரமை பயன்படுத்துவது எப்படி?
தலை முடிக்கு சீரமை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். தலைமுடிக்கு சீரமை பயன்படுத்துவதற்கு முன்னர் தலை முடியை ஷேம்பு கொண்டு நன்கு அலசிக் கொள்ள வேண்டும். ஷாம்பு கொண்டு தலை முடியை அலசி உலர்த்திய பிறகு சீரமை தலை முடிக்கு பயன்படுத்தலாம்.
கூந்தல் முழுமையாக காய்ந்து விடாமல் ஓரளவுக்கு ஈரப்பதத்துடன் இருக்கும் பொழுது பயன்படுத்த வேண்டும். தலை முடிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தலைப் பகுதிக்கு(scalp) பயன்படுத்தக் கூடாது.
ஹேர் சீரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்…
* நாம் தலைக்கு ஹேர் ஸ்டைலிங்க் கருவிகளை பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து வெப்பம் வெளிப்படும். இந்த வெப்பத்தில் இருந்து கூந்தலை பாதுகாக்க ஹேர் சீரம் பயன்படுத்தலாம்.
* கரடு முரடாக இருக்கும் கூந்தலை மென்மையாக மாற்றிக் கொடுக்க இந்த ஹேர் சீரம் பயன்படுகின்றது.
* தலை முடிக்கு ஹேர் சீரம் பயன்படுத்துவதால் தலை முடி பளபளப்பாகும்.
* தலை முடிக்கு சீரம் பயன்படுத்துவதால் தலை முடி உதிர்தல் தடுக்கப்படுகின்றது.
* தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஹேர் சீரமை பயன்படுத்துவதால் கிடைக்கின்றது.
* கூந்தல் வறட்சியாக இருந்தால் இந்த ஹேர் சீரம் கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்கின்றது.