சிவபெருமானின் பிரசாதம் ருத்ராட்சம்!!  திருமணம் ஆனவர்கள் அணியலாமா!!  கூடாதா!!

0
54

சிவபெருமானின் பிரசாதம் ருத்ராட்சம்!!  திருமணம் ஆனவர்கள் அணியலாமா!!  கூடாதா!!

சிவபெருமானின் பிரசாதமாக கருதப்படும் ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம் திருமணம் ஆனவர்கள் அணியலாமா கூடாதா என்பதை பற்றி எல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ருத்ராட்சம் என்பது சிவனின் கண்ணீரில் இருந்து உருவானதாக கூறப்படுகின்றது. இந்த ருத்ராட்ச மாலையை சித்தர்கள் அணிந்திருப்பார்கள். எந்தவொரு சிவலிங்கத்தையும் ருத்ராட்சம் அணியாமல் அலங்கரிக்கவே மாட்டார்கள். இந்த ருத்ராட்சத்தை நாம் அணிந்தால் சிவனின் அருள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

ருத்ராட்சத்தின் வகைகள்…

ருத்ராட்சத்தில் 21 வகைகள் உள்ளது. அதாவது ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை வைத்து கணக்கிட்டு அதன் வகையை தெரிந்து கொள்ளலாம். அதாவது ருத்ராட்சம் மேல் நான்கு கோடுகள் இருந்தால் அது நான்கு முகம் கொண்டது. அதுவே 5 கோடுகள் இருந்தால் பஞ்சமுகம் என்று பெயர். அதுவே ருத்ராட்சம் மேல் 7 கோடுகள் இருந்தால் அது ஏழு முக ருத்ராட்சம் என்று அழைக்கப்படும்.

இதில் ஒரு முகம் கொண்ட ருத்ராட்சம் கிடைப்பது அரிது. இந்த ஒரு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிந்தால் மோட்சம் தரக்கூடிய சக்தியை அளிக்கின்றது. இரண்டு முகம் கொண்ட ருத்ராட்சம் அணிந்தால் நம்முடைய பாவங்கள் தீரும். மூன்று முகங்களை கொண்ட ருத்ராட்சத்தை அங்காரகன் ஆள்வதாக சொல்வார்கள்.

நான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவதால் புத்தி கூர்மை ஏற்படும். 5 முகம் கொண்ட ருத்ராட்சம் அணிந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் மனம் வலிமை பெறும்.

ஏழு முகம் கொண்ட ருத்ராட்சம் பிச்சைக்காரனையும் அரசனாக மாற்றக் கூடிய சக்தி கொண்டது. இதை அணிந்து கொண்டால் நிதி சிக்கலில் இருந்து விடுபடலாம். இவ்வாறு ஒவ்வொரு ருத்ராட்சத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கின்றது.

இந்த ருத்ராட்சங்களில் 12 முகம் கொண்ட ருத்ராட்சம் முதல் 21 முகம் கொண்ட ருத்ராட்சம் கிடைப்பது அரிது. மேலும் 1,7,8,9,11 ஆகிய முகம் கொண்ட ருத்ராட்சங்கள் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று.

ருத்ராட்சத்தை யார் எல்லாம் அணியலாம்…

ருத்ராட்சத்தை சிறிய குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம். மாதவிடாய், தாம்பத்யம் ஆகியவை இயற்கையான ஒன்று என்பதால் இதை அணிவதில் தவறில்லை. யாருக்காவது திதி கொடுக்கும் பொழுது இதை அணியலாம். மற்ற சமயங்களில் சுத்தமாக இருக்க வேண்டும்.

என்ன செய்யக்கூடாது…

ருத்ராட்சம் அணிந்திருக்கும் பொழுது மது அருந்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. இறுதிச் சடங்குகள் போன்ற காரியங்களை செய்யக் கூடாது. மேலும் அசைவம் சாப்பிடக் கூடாது.

ருத்ராட்சம் அணியும் முறை…

ருத்ராட்சம் அணியும் முன்பு இதூ சுத்தமான நெய்யில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சுத்தமான பசும்பாலில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அது இதை ஆறு மதத்திற்கு ஒரு முறை கட்டாயம் செய்ய வேண்டும்.

மேலும் ருத்ராட்சத்தை கருப்பு நூல் கொண்ட கயிற்றில் அணியக்கூடாது. சிவப்பு, வெள்ளை போன்ற வண்ணங்கள் கொண்ட நூலால் ஆன கயிற்றால் அணியலாம். மேலும் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களிலும் அணியலாம்.

திருமணம் ஆனவர்கள் அணியலாமா..

திருமணம் ஆனவர்கள் ஆண், பெண் இருவரும் தாராளமாக அணியலாம். திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என்பது தவறான கருத்து ஆகும். திருமணம் ஆனவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள். அந்த சமயம் ருத்ராட்சம் அணியக்கூடாது. அணிந்தால் சாமியாராகி விடுவார்கள் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.

திருமணம் ஆனவர்களும் அணியலாம். அதாவது சிவன் கோவில்களில் தினமும் பள்ளி எழுச்சி நடைபெறும். அப்பொழுது இரவு சிவனும் அம்பாளும் ஊஞ்சலில் ஒன்றாக அமர்ந்திருப்பர். பின்னர் மறுநாள் காலையில் சிவனையும் அம்பாளையும் அவரவர்.இடத்திற்கு கொண்டு சென்று விடுவர்.

இதன் காரணம் என்ன என்றால் சிவனும் அம்பாளும் சேர்ந்திருப்பது என்பது தான் அர்த்தம். அப்பொழுது சிவன் ருத்ராட்சம் அணிந்திருப்பார். அதனால் திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணிவதில் எந்த தவறும் இல்லை.