2 வாரத்தில் பைசா செலவில்லாமல் தொப்பை இடுப்பு சுற்றளவு குறைய வேண்டுமா? இந்த 2 பொருள்கள் மட்டும் போதும்!

Photo of author

By Amutha

2 வாரத்தில் பைசா செலவில்லாமல் தொப்பை இடுப்பு சுற்றளவு குறைய வேண்டுமா? இந்த 2 பொருள்கள் மட்டும் போதும்! 

சிறிது கூட கஷ்டப்படாமல் உங்களது தொப்பையை 2 வாரத்தில் குறிக்கக்கூடிய ஒரு எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

இந்த பவுடரை நீங்கள் 2 வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் எந்தவித பக்க விளைவுகள் மற்றும் உடல் சோர்வுகள் இன்றி உங்களது தொப்பையானது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். ஆண்கள், பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம்.

இந்த பவுடரை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் தொப்பையின் சுற்றளவை அளந்துக் கொள்ளவும். இந்த பவுடரை பயன்படுத்திய பின்னர் உங்கள் தொப்பையை இரண்டு வாரங்களுக்கு பின்னர் அளந்து பார்க்க கட்டாயம் 4 முதல் 5 இன்ச் வரை குறைந்திருக்கும்.

** இதற்கு முதலில் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் கறிவேப்பிலை. கறிவேப்பிலையில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது உங்களுக்கு இரும்பு சத்து, கால்சியம் சத்து கிடைக்க செய்வதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் நச்சுக்களையும் நீக்க வல்லது.

** கருவேப்பிலை இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அலசி விட்டு நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். வெயிலில் காய வைக்க கூடாது. இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்திருந்தால் போதும் நன்றாக காய்ந்து விடும்.

** அடுத்து எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் சீரகம். இது நமது உடலில் உள்ள கெட்ட கலோரிகளை வெளியேற்றிவிட்டு உள்ளுறுப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். செரிமான கோளாறுகள், வயிற்றில் இருக்கும் நச்சுக்கள் போன்றவற்றை நீக்க விடும்.

** கறிவேப்பிலை 2 கப் அளவு எடுத்துக் கொண்டால் சீரகம் ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு முறையில் சரியாக இருக்கும். இதை இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.

** இதை காற்று போகாத ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அரைத்து வைத்த பவுடரை சேர்த்து கலக்கி விட்டு அடுத்து ஒரு ஸ்பூன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

** உங்களுக்கு சர்க்கரை வியாதி என்றால் தேன் நாட்டு சர்க்கரை எதுவும் சேர்க்காமல் குடிக்கலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது. கறிவேப்பிலை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கக்கூடியது.

** இந்த பவுடரை இரண்டு வாரங்கள் காலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு படுக்கப் போகும் முன்பு குடித்து வர கட்டாயம் உங்களது தொப்பை குறைந்து இருப்பதை கண்கூடாக காணலாம்.