உடல் எடை குறைய வேண்டுமா? தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய சூப்பர் டிரிங்க்!

Photo of author

By Parthipan K

உடல் எடை குறைய வேண்டுமா? தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய சூப்பர் டிரிங்க்!

தற்போது உள்ள சூழலில் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக நாம் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து உடல் பருமன் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. இதனை நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உடல் எடையினை குறைத்துக் கொள்ள முடியும் அதன் செய்முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

உடல் எடையை குறைக்கச் செய்யும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருளான சீரகத்தில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. இவை செரிமானத்தை சீராக்கி உடலில் கழிவுகள் தங்காதவாறு பாதுகாக்கிறது. பல வகையான புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் தன்மையும் கொண்டுள்ளது.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மையை ஓமம் கொண்டுள்ளது. இதன் விளைவாக நுரையீரல் பகுதியில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து சுவாச பாதைக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. மற்றும் உடல் எடை அதிகரிப்பதை தடுத்து நம் உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புக்கு தங்காதவாறு பாதுகாத்து கொள்கிறார்கள்.

ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு ஒரு ஸ்பூன் வெந்தயம் ஆகிய மூன்றையும் சிறிதளவு வெந்நீரில் கலந்து இரவு உறங்குவதற்கு முன் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு மறுநாள் காலையில் இதனை வடிகட்டி அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகி வருவதன் காரணமாக நம் உடலில் உள்ள அனைத்து வகையான கெட்ட கழிவுகளும் வெளியேற்றி நம் உடலினை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

இதன் விளைவாக நம் உடலில் கெட்ட கொழுப்புகள் தாங்காதவாறு பாதுகாத்து நம் உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.