பத்து நாட்களில் உடல் எடை குறைய வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீர் போதும்!
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே வருந்தத்தக்க விஷயம் என்றால் உணவு முறை சரியில்லாத காரணத்தால் அதிக உடல் எடையை கொண்டிருப்பது தான். ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் அன்றாட உட்கொண்டு வரும் பொழுது இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகின்றது என மருத்துவங்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். உடல் எடையை குறைப்பதற்கு பொதுவாக தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவ்வாறு ஒரே நேரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை குடிப்பதன் மூலம் நம்முடைய வயிற்றுப் பகுதியில் சதை விரிவடைந்து வயிறு பெரிதாகும்.
அடுத்ததாக சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் எப்பொழுதும் குடிக்க கூடாது. அவ்வாறு குடிக்கும் பொழுது நாம் சாப்பிட்ட உணவு செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
பத்து நாட்களில் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அதற்கு தேவையானது சுடுதண்ணீர் மட்டும் தான். அது மட்டும் இன்றி தண்ணீர் குடிக்கும் பொழுது நாம் டம்ளர் அல்லது வாட்டர் பாட்டிலில் வாய் வைத்து தான் குடிக்க வேண்டும்.
இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதனை 8 டம்ளராக பிரித்து குடிக்க வேண்டும். ஒரு டம்ளர் சுடுதண்ணீர் குடித்துவிட்டு சிறிது தூரம் நடக்க வேண்டும். அதன் பிறகு காலை உணவு உண்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும். அதன் பிறகு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதன் பிறகு மதிய உணவிற்கு முன்பு மதிய உணவுக்கு பின்பும் ஒரு ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். இரவு உணவு உண்பதற்கு முன்பும் உணவு உண்ட பின்பும் குடிக்க வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் பத்து நாட்களில் நம்முடைய உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதை காணலாம்.