உங்கள் உடல் எடையை குறைக்க உடலை வருத்தி கடின உடற்பயிற்சி செய்தல்,ஆபாத்தான உணவு முறைகளை கடைபிடித்தல் போன்ற எதையும் செய்ய தேவையில்லை.நீங்கள் சாப்பிட்டே உடல் எடையை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
உடல் எடை கூடினால் சோம்பேறித் தனம் தானாக வந்துவிடும்.இதனால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முதலில் என்ன மாதிரியான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்ன விஷயங்களை செய்யக் கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் ஜங்க் புட்ஸ்,கடை உணவுகளை முதலில் தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தி சாப்பிடக் கூடிய உணவுகள்,வறுத்த,பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்புள்ள அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.சர்க்கரையை எதிலும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.சாப்பிட்ட உடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.இரவு நேரத்தில் நன்றாக உறங்க வேண்டும்.மலம் மற்றும் சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்றிவிட வேண்டும்.
புரதம் நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.முட்டையின் வெள்ளைக்கரு,குறைந்த எண்ணையில் செய்த கோழி இறைச்சி,முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகளை சாப்பிட வேண்டும்.தினமும் ஒரு மூலிகை பானம் பருக வேண்டும்.
பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.பழுப்பு அரிசி மற்றும் முழு கோதுமை உணவுகளை சாப்பிட வேண்டும்.
தினமும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.நீச்சல்,நடைபயிற்சி,ஓட்டப்பயிற்சி,சைக்கிளிங் போன்றவற்றை செய்ய வேண்டும்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு நீங்கள் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.மன அழுத்தம் குறைய யோகா,தியானம் போன்றவற்றை செய்யலாம்.நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க பருக வேண்டிய பானம்:
ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை நேரத்தில் குடித்தால் உடல் எடை சீக்கிரம் கட்டுப்படும்.