உடலில் காணப்படும் ஊளைச்சதை குறைய கொள்ளு மற்றும் பார்லியில் கஞ்சி செய்து காலை நேரத்தில் குடிக்கலாம்.ஒரு மாதத்தில் நான்கு கிலோ வரை உடல் எடை குறையும்.
தேவையான பொருட்கள்:-
1)கொள்ளு – கால் கப்
2)பார்லி அரிசி – கால் கப்
3)மிளகு – அரை தேக்கரண்டி
4)சீரகம் – அரை தேக்கரண்டி
5)பூண்டு பற்கள் – நான்கு
6)உப்பு – சிறிதளவு
7)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
1.முதலில் கால் கப் கொள்ளு பருப்பு மற்றும் கால் கப் பார்லி அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும்.இவை இரண்டையும் கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
2.அதன் பிறகு தண்ணீரை வடிகட்டிவிட்டு மிக்சர் ஜாரில் கொள்ளு பருப்பு மற்றும் பார்லி அரிசியை போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
3.பிறகு குக்கர் ஒன்றில் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.அடுத்து அரை தேக்கரண்டி கருப்பு மிளகு,அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4.அடுத்து நான்கு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு அதில் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு நான்கு விசில் வரும் வரை வேகவிட வேண்டும்.பிறகு இந்த அடுப்பை அணைத்துவிட வேண்டும்.விசில் நின்றதும் தயாரான கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து பருக வேண்டும்.
இந்த கொள்ளு பார்லி கஞ்சி உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.கொள்ளு பார்லி கஞ்சி குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.ஒரு மாதத்தில் ஐந்து கிலோ வரை உடல் எடை குறைய இந்த பானத்தை பருகலாம்.
உடல் எடை குறைய மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)கொள்ளு – 50 கிராம்
2)சீரகம் – கால் தேக்கரண்டி
3)சின்ன வெங்காயம் – நான்கு
4)உப்பு – சிறிதளவு
5)பூண்டு பல் – இரண்டு
செய்முறை விளக்கம்:-
1.குக்கரில் 50 கிராம் கொள்ளு பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
2.பிறகு அதில் கால் தேக்கரண்டி சீரகம்,நான்கு தோல் உரித்த சின்ன வெங்காயத்தை போட வேண்டும்.
3.அதன் பிறகு இரண்டு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு அதில் போட வேண்டும்.பிறகு சிறிதளவு உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில்விட்டு இறக்க வேண்டும்.
4.இந்த கொள்ளு கஞ்சியை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.